நித்ய வரம் வேண்டும்

 • தினம் உனைப் பாடும் வரம் வேண்டும்
 • நான் தேடும் பரம் நீ உடன்வரவேண்டும்
 • மனம் உன்னைத் துதித்து மகிழ வேண்டும்
 • இதயம் உன் கீதைப் பாதை வழி தொழ வேண்டும்
 • நீங்காமல் உன் நாமம் நெஞ்சமதி லொலிக்க வேண்டும்
 • அது நிலையாக நின்றங்கு நிலைத்து நீடிக்க வேண்டும்
 • மங்காத உன் கருணைதான் கிடைக்க வேண்டும்
 • அது வற்றா ஜீவநதியாய்ப் பெருகி பக்தர் மனதில்
 • அன்பென்று அடைக்கலமாய்ச் சேரவேண்டும்
 • அலைபாயும் வாழ்வியலில் உன் அருளென்னும்
 • நங்கூரம்தான் வேண்டும்
 • நிலைமாறிப் பழவினை, இரு வினையாய் வந்தாலும்
 • மலைபோல் துன்பம் துயர், ஊழ்வினையால்
 • வரினும், அவை பனிபோல் நீங்கி உன்
 • பதமதில் பணியவே உன் சங்கல்ப
 • சாந்நித்யம் சாஸ்வதமாய்வேண்டும்
 • ஆதி அந்தமும் நீயே மாதா பிதா குரு
 • தெய்வம் சகாவும் நீயே,
 • நான் இருக்கப்பயமே னெனும் உன் மந்திரச்சொல்லே
 • மங்காது எங்களைக் காத்திடும் தான்
 • ஸ்ரீ சத்ய சாயீசா பர்த்தீசா, வருவாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0