பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தமிழ்நாட்டு திக்விஜயம்

யுகாவதாரமான நமது பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் தனிப்பெருங் கருணையினால் எண்ணற்ற முறை தமிழ்நாட்டிற்கு திக்விஜயம் செய்துள்ளார். அவர் சர்வ லோக சஞ்சாரி. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் கூட இருந்ததாக சான்றுகள் உண்டு. அப்படிப்பட்ட அவதார புருஷரின் விஜயங்களைப் பற்றி எழுதி வைத்தவர் மிகச் சிலரே. பல குடும்பங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன. நமது அன்பு இறைவனின் பாத கமலங்களை மிகப் பணிவன்புடன் பற்றி அவரது தமிழ்நாட்டு திக்விஜய வரலாற்றினை இந்த தமிழ் புதுவருடத்தில் ஆரம்பித்து, தொடர்ச்சியாக எழுத ஆசீர்வதித்து, கை கொடுக்குமாறு வேண்டி நிற்கிறோம். கூடவே மிக அரிய புகைப் படங்களும் பகவானின் ஆசியுடன் வெளிவரும்.

முதல் அவதாரம் மகாராஷ்டிரத்திலும், இந்த அவதாரம் மதராஷ்டிரத்திலும் தோன்றியுள்ளது என பகவான் ஒரு அமுத உரையில் கூறி இருந்தார். திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, ஹைதராபாத் சமஸ்தானங்களையும், பிரெஞ்சு ஆட்சியில் இருந்த பாண்டிச்சேரியையும் தவிர்த்து தென் இந்தியா அனைத்தும் அந்தக் காலத்தில், மதராஸ் பிரெசிடென்சியில் அடங்கியிருந்தது. அதனால் தான் பகவான் அவ்வாறு உரைத்தார். மதராஸ் , கரூர், மதுரை போன்ற பல இடங்களிலிருந்து ‘அதிசய பையன்’ (Wonder boy), ‘பால சாய்’ என்றும் அழைக்கப் பட்ட ஒருவர் பல வகைப் பட்ட நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரனாக வந்திருப்பதை அறிந்து, தீராத உடல் நோய், மன நோய், பல் வேறு துன்பங்களுக்கு விமோசனம் தேடி, புட்டப்பர்த்தியை நோக்கி செல்லலாயினர். குணமானதும் மற்றவரிடம் கூறி, பலர் பக்தி என்னும் ஆன்ம மருந்து பெறலாயினர். ‘திரும்பத் திரும்ப எங்கள் ஊருக்கு வாருங்கள்’ என்று பகவானிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தனர்.

Where Shaivism and Vaishnavism flourished, through the path shown by the Naayanmaars and Azhwars, the people of Tamil Nadu were immersed in their devotion for God and lived a life of spiritual proximity with God. It was no wonder then, that Bhagawan who is the embodiment of Siva and Sakthi, soon after announcing His Divine incarnation, closely associated Himself with the state of Tamil Nadu.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கி நாயன்மார்கள், ஆழ்வார்கள் மூலம் இறை பக்தியில் திளைத்து தெய்வத்துடன் நெருங்கிய ஆன்மீக வாழ்வில் லயித்திருந்தனர் தமிழர்கள். அத்தகைய தமிழ் நாட்டுடன் சிவசக்தி சொரூபனான ஐயன், தான் அவதாரமெடுத்து வந்திருப்பதை அறிவித்த சூட்டோடு தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதில் அதிசயம் ஏதுமில்லையே!
பழம் பெரும் பக்தரான சுப்ரமணியச் செட்டியாரின் சகோதரியான கரூர் ராமலக்ஷ்மி அம்மையாரின் கனவில் தோன்றி பெனுகொண்டா வழியாக புட்டபர்த்தி வருமாறு அழைத்தார் நம் மாதவன். கிருஷ்ண பக்தையான அவரும் 40 நாட்கள் தங்கி தீராத நோய் குணமாகி வந்ததும் செட்டியாரும் புட்டபர்த்தி சென்று தங்கினார்.

இவ்வாறு இறைவன் கனவில் வந்தது உண்மையில் நேரடி வருகை அல்லவா? அப்படியாயின், 1940ல், ஐயன் கரூர் வந்து அழைப்பு விடுத்தார் என்றாகிவிடுகிறது. 1940ல் அவதாரப் பிரகடனம் செய்தவுடனேயே மேற்குறிப்பிட்ட காரணத்தினால். கரூர், மதுரை போன்ற பல இடங்களில் சாயி பக்தர்கள் உருவாகி, புட்டபர்த்தி செல்வதும் வருவதுமாக இருந்தனர்.

பகவான் தாமே நேரில் 1942ல், எழும்பூர் வந்து தங்கி இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் மிகச் சிறு இளைஞனாக இருக்கும் போதே தர்ம ஸ்தாபனத்திற்காக, தன் அவதார திருப்பணி ஆழமாக ஊன்றி செழிப்பதற்காக தமிழ்நாட்டின் நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள், ‘பட்டி தொட்டி தோறும்’ என்று கூறுவது போல சாலை கூட இல்லாத பல இடங்களில் தன் திவ்விய பாதச் சுவடுகளைப் பதித்திருக்கிறார். அந்தக் காலத்தைய பழம் பெரும் பக்தர்களின் ஆழ்ந்த அன்பும் தூய பக்தியுமே இந்த அன்பு தெய்வத்தைக் காந்தமெனக் கவர்ந்திழுத்ததெனக் கூறினால் மிகையாகாது. அவர்களுக்கு நம் நன்றிக் கடன் உரித்தாகுக. ஒரு மாமன்னன் குறுமன்னர்கள் மீது போர் தொடுத்ததை, ஒரு நாடு இன்னுமொரு நாட்டைக் கபளீகரம் செய்ததை, வல்லரசுகள் மோதிக்கொண்டதை அறிவது தான் ‘சரித்திரம்’ என எண்ணுகின்றோம். ஆழ்ந்து சிந்தித்தோமானால் நம் சரித்திர நாயகனின் கதை (His Story) தான் அர்த்தம் பொதிந்த சரித்திரம் (History).

முதன் முதலில் தெரிய வந்துள்ள விஜயமானது சென்னையில் 1942ல் ஸ்ரீ ராகவ நாயுடு என்பவரின் வீராசாமித் தெருவிலுள்ள எழும்பூர் வீட்டிற்குத் தான் என அறிய வந்துள்ளது. இங்கு பஜனை (துதிப் படல்கள்) நடந்தபோது வந்து கலந்து கொண்டவர் பலர். அருகாமையில் இருந்த வோல்கார்ட் பிரதர்ஸ் என்று அழைக்கப் பட்ட பார்த்தசாரதி முதலியார், நாகரத்தினம் முதலியார் வந்து பகவானின் அருட் பார்வையும் ஆசியும் பெற்றனர். தொடர்ந்து பார்த்தசாரதி முதலியார் புட்டபர்த்தி சென்ற போது ஒரு ஆப்பிள் பழத்தை சிருஷ்டித்துக் கொடுத்து அவரது நெடுநாளைய ஆஸ்த்மா நோயை அறவே அழித்தார் நம் சாய் பகவான். அவரது அன்னை கண் புரை மறைத்து குருடாக இருந்த நிலையில் இருந்தார். கண்களின் மேல் மல்லிகைப்பூ வைத்துக் கட்டி நம் சாய் செய்த சிகிச்சையினால் மீண்டும் கண் பார்வை தெளிவாகப் பெற்றார்.

ராகவ நாயுடுவின் உறவினரான பர்மாவிலிருந்து அனைத்தும் இழந்த அகதிகளாக வந்த கமலம்மா, மூத்த பெண் சந்திரம்மா, மாப்பிள்ளை ஆளவந்தான் நாயுடு, மகன் தீனதயாளுவும் இருந்தனர். பின்பு வருவதாக இருந்த கணவர், ராஜ சேகர நாயுடு வந்து சேராத கவலையில் மூழ்கி இருந்த கமலம்மாவைப் பார்த்து, ‘மாண்டலே’யிலிருந்து கடும் துன்பங்களைத் தாண்டி அவர்கள் வந்து சேர்ந்ததை விவரித்தார் பகவான். அவர்கள் அனைவரும் பிரமிப்புக்குள்ளாயினர். ஏனெனில், பர்மாவிலிருந்து, அதுவும் மாண்டலேயிலிருந்து தப்பித்து வந்ததைப் பற்றி அவரிடம் எதுவும் கூறாத போது எவ்வாறு எல்லாவற்றையும் தத்ரூபமாக விவரிக்கிறார் என வியந்தனர். பகவான் அறியாதது என்ன?எப்போது கணவர் வந்து சேர்வார் என்று கமலம்மா வினவிய போது, ‘அவர் சன்யாசம் பெற்று விட்டார். மறந்து விடுங்கள்’, என்று கூறி விட்டார். பின்னர் ஒரு பச்சை ஆப்பிளை சிருஷ்டித்துக் கொடுத்து கமலம்மா மட்டுமே, அதை உண்ணுமாறு பணித்தார். ‘நான் கூடவே இருந்து காப்பாற்றுவேன்’ என்று அபயகரமும் கொடுத்தார். ஆப்பிள் சாப்பிட்ட பின் படிப் படியாக கவலைகள், ஞாபகங்கள் மறைந்தன. ஸ்வாமி காட்டிய வழியினால் கமலம்மாவிற்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாதா மாதம் பென்ஷன் கடைசி வரைக்கும் கிடைத்து வந்தது.

இன்னும் பலர் ராகவ நாயுடு வீட்டில் பகவானை சந்தித்து பக்தராகி இருக்கலாம். ஆனால் தகவல்கள் கிடைக்கவில்லை.

Source: April 2014, Tamil Sanathana Sarathi Issue.

சுந்தரம் சுந்தரமே

ஐம்பத்தைந்து அடி நெடிதுயர்ந்து மிகுந்த பொலிவுடன் கம்பீரமாக விளங்கும் சுந்தரம், அவதார புருஷரின் ஐம்பத் தைந்தாவது வருடத்தில் அவரது திவ்விய வாசஸ்தலமாக புனிதமாக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு பகவான் அன்புடன் அளித்த பொக்கிஷம் அது. 1976ல் ‘சுந்தரம்’ என்ற பெயரில் அங்கிருந்த கட்டடம் தான் 1981ல் அவ்வாறு மாறியது என்று கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள். அத்தகைய மாற்றம்! அது ஈசனின் காவியம். அதன் சில்பி, ஸ்தபதி, வடிவமைப்பாளர் அனைத்துமே சுந்தரமூர்த்தியாக இருக்கும்போது அந்தக் கவின்மிகுகோயில் சுந்தரமாகத் தானே இருக்கமுடியும். இந்த அழகிய காவியத்தை நாடி உலகின் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.

தெய்வீக அதிர்வலைகளுடன் அமைந்துள்ள சுந்தரம், அவசரகதியில் பறக்கும் தினசரி வாழ்வின் சவால்களுக்கு, கவலைகளுக்கு இதம் தரும் மருந்தாக விளங்குகிறது. மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுள்ளவர்களுக்கு பல்வேறு சேவை வாய்ப்புகள் இங்குள்ளதால் சேவையில் ஈடுபட்டு ஆன்மிக திருப்தி அடைகின்றனர். தனிமையில் தவிப்பவர்கள் இங்குள்ள சாய் குடும்பத்தின் அன்பில், அரவணைப்பில் இறைவனின் அன்புக்கரத்தையே காண்கின்றனர். பாடுவதில் ஆவல் உள்ளவர்கள் இங்குள்ள பஜனைக்குழுவின் வழிகாட்டுதலில், சேர்ந்து பாடும் இன்பம், இறைவனின் பல்வேறு உருவங்களைத் துதிக்கும் அனுபவம், கேட்போர் இதயத்தைத் தொட்டு அமைதி, ஆனந்தாமிர்தம் அளிப்பதால் தாங்களும் சேவை செய்கிறோம் என்ற மகிழ்வும், திருப்தியும் அடைகின்றனர். இவ்வாறு அவரவர் தேவைகளுக்கு, திறன்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை நாடி வந்து பயன் அடைகின்றனர். உண்மையில் சுந்தரம் அழகிய கோயில் மட்டுமல்ல. அதனுடன் இசைந்திருப்போரின் உள் அழகை வெளிக் கொணர்கின்றது.

சுந்தரத்தின் அழகை சிறிது உற்று நோக்குவோம்.

கூரை மத்தியில் உயர்ந்திருக்கும் கோபுரத்தில்ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணர், அனுமார் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கோபுரத்தினடியில் ஒரு அன்றலர்ந்த செந்தாமரை போன்று உள்ளது தரிசன முற்றம். பகவான் நகரசங்கீர்த்தனத்தின் முடிவில் அங்கு எழுந்தருளி விஸ்வரூப தரிசனம் அளிக்கும் கண்கொள்ளாக்காட்சி என்றும் பசுமையாக பக்தர்கள் மனதில் நிலைத்திருக்கும். அந்த முற்றத்தின் அருகில் ஒரு நீண்ட தாழ்வாரம் பகவானின் ஊஞ்சல் வரை செல்கிறது. ஊஞ்சலுக்குப்பின்பக்கத்தில் பகவானின் அழகிய படம் ஒன்று உள்ளது. பக்தர்கள் மிக ஆர்வமாக வந்து ஊஞ்சல் முன் அமர்ந்து தியானம் செய்வர். இந்த இடத்தின் பூர்ண அமைதி, தெய்வீக அதிர்வலைகள் மட்டுமன்றி பகவானின் சான்னித்தியத்தை பலர் உணர்வதால் தியானம் மிக நன்றாக அமைகிறது. சில சமயங்களில் ஊஞ்சல் ஆடுவதை பலர் பார்த்திருக்கின்றனர். அட்சதையால் ஆசீர்வதிக்கப்பட்டும் இருக்கின்றனர். ஊஞ்சல் அருகில் உள்ள கதவிற்குப்பின்னால் பகவானின் அறைகள் உள்ளன. அதே தளத்தில் பின் புறப் படிக்கட்டருகில் தமிழ் ரேடியோ சாய் நிகழ்ச்சிகள் பதிவிடும் அறைகள் உள்ளன.

சுந்தரத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன. நடுவில் உள்ள உயரமான வாயில் சுந்தரத்தின் பிரதான வாயிலுக்கு நேராக உள்ளது. முதல் வாயிலைக்கடந்து வந்தால் இடது பக்கத்தில் மதில் சுவரின் உள்பக்கத்தில் தசாவதாரங்களும் ஆதி சங்கரர், ஜோராஷ்திரர், குரு கோவிந்த் சிங், புத்தர், மகாவீரர் ஆகியோர் காணப்படுகின்றனர். வலது பக்கத்தில் ஸ்ரீ சாயி சுந்தரேஸ்வரர் ஆலயத்தைக் காணலாம். அதில் மூலவராக ஸ்ரீ சாயி சுந்தரேஸ்வர லிங்கம் விளங்குகிறது. அதன் இருமருங்கிலும் விநாயகர், சுப்பிரமணியர் சிலைகளைக் காணலாம். மூலவரின் திருஷ்டி படுமாறு நந்தி, நவக்கிரஹங்கள் ஆகியவை அமைந்துள்ளன. பிரகாரத்தில் திரிமூர்த்திகளும் துர்கை அம்மனும் வீற்றிருக்கின்றனர். அங்கு துதித்து விட்டு சுந்தரத்தை நோக்கி சென்றால் பார்வதி அன்னையும் சிவபெருமானும் கொலு வீற்றிருப்பதைக் காணலாம். கட்டடத்தின் இரு மூலைகளில் விநாயகரும்,சுப்ரமணியரும் உள்ளனர். கதவு வழியாக உள்ளே சென்றால் தென்படும். சிறு கூடத்தில் பஜனைகள் நடைபெறும். மீதி அறைகளில் சுந்தரம் பராமரிப்பு, பஜனைக்குழுவினர் பயிற்சி, பாலவிகாஸ் 1, 2, 3, 4வகுப்புகளுக்குக் கற்றுக் கொடுப்பது, அருகில் உள்ள சாய் நகர் குழந்தைகளுக்கு பள்ளிப்பாடத்தில் உதவி செய்வது என்று பலசேவைப்பணிகள் நடைபெறும்.

பிரதான வைகுண்ட வாசல் மிகுந்த கலை நுணுக்கம் உள்ள தசாவதாரம், அஷ்டலக்ஷ்மி, நவக்கிரகங்கள், சர்வ தர்ம இலச்சினைகள், வாஹனங்கள் ஆகியவை செதுக்கப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது. அதன் இரு புறமும் துவாரபாலகர்கள் சிங்கங்களுடன் காட்சி அளிக்கின்றனர். வெளிப்புறத்தில் இருமருங்கும் யாளிகள், அன்னபட்சிகள் அழகான கலை நயம் மிளிரும் தோகையுடன் சோபிக்கின்றன. உள்ளே ஒரு பெரிய கூடம். ஒன்பது வேலைப்பாடுகள் அழகூட்டும் ஜன்னல்கள் காற்றும் வெளிச்சமும் வர வழியமைக்கின்றன. மேடையில் மிகப்பெரிய அழகிய பகவானின் படம் சுவரை அலங்கரிக்கின்றது. அதன் அருகில் இரண்டு கண்ணாடிக்கதவுகளின் மீது சிவன், நாராயணன் படங்கள் வரையப்பட்டுள்ளன. எழில் வடியும் முன்முகப்புத் தோற்றமும் அழகிய வேலைப்பாடுகள் உள்ள ஜன்னல்களும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இங்கு மாலை நேரங்களில் பஜனை நடைபெறும். வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் பிரசித்தி பெற்ற சுந்தரம் பஜனைக்குழுவினர் பகவானை ஆராதிப்பர். ஏனைய நாட்களில் சமிதியினர் பாடி ஆராதிப்பர். பஜனையின்போது ஏற்படும் தெய்வீக அதிர்வலைகள் கேட்பவர் மனத்தில் ஆனந்த அலைகளை ஏற்படுத்தி மகிழ்வூட்டுகின்றன. இங்கு வாசக வட்டங்கள், பேரிடர் மேலாண்மை பயிற்சி, சமிதிகளின் வருடாந்தர விழாக்கள், பாலவிகாஸ் குருமார் கூட்டங்கள், பயிற்சி, சேவாதள சாதனா முகாம்கள், கோடை முகாம்கள், மலர் மாலை கட்டுதல், பஜனை முடிவில் கொடுப்பதற்காக விபூதி மடித்தல், போன்ற பல் வேறுசெயல்பாடுகள் இங்கு நடைபெறுகின்றன.

சுந்தரத்தின் இடது பக்கத்தில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா மந்திர் உள்ளது. அவரது பளிங்கு சிலையின் முன்பு வெள்ளி பாதுகைகள் உள்ளன. வியாழக்கிழமைகளில், முக்கியமான நாட்களில் அபிஷேகம் செய்வதற்காக ஒரு பஞ்சலோக சிலையும் உள்ளது. பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஒரு முறை பூஜையின் போது ஒரு பளிச்சிடும் மாணிக்கம் ஒன்றை சிருஷ்டித்து பகவான் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா சிலையின் நெற்றியில் பதித்தார். அதை இப்போதும் அபிஷேகத்தின்பின்னர் சந்தனத்துடன் நெற்றியில் வைக்கின்றனர்.

ஸ்ரீ ஷீரடி பாபா மந்திரின் இடது பக்கத்தில் கேரளாவில் அமைக்கும் கோயில் போன்ற ஒரு சிறிய அமைப்பில் ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமியின் மனதைக்கவரும் பளிங்கு சிலை புன்னை மரத்தின் கீழ் உள்ளது. தினசரி காலை, மாலை அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை நடைபெறுகின்றது. பிரதோஷதினத்தில் ஸ்ரீ சாய் சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் மாலையில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் ஆருத்ராதினத்தன்று ஏகாதச ருத்ர அபிஷேகம் நடைபெறும். முக்கிய தினங்களில் ஹோமமும் நடக்கும்.

புஸ்தக வெளியீட்டுப்பிரிவு ஸ்ரீ சாய் சுந்தரேஸ்வரர் ஆலயத்தருகில் ஒரு அறையில் இயங்குகிறது. அதனருகில் உள்ள அறைகளில், அன்பு திரவம் (இரத்தம்)கோரி வரும் அழைப்புகளுக்கு உதவும் சேவை மையம், நடமாடும் ஆஸ்பத்திரி ஆகியவற்றின் அலுவலகங்கள் இயங்குகின்றன. டாக்டர்களும், சேவாதளத்தினரும் நோயைக்கண்டறிய உதவும் பரிசோதனை வசதிகள், ஏனைய வசதிகள் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரி வாகனம் மூலம் மருத்துவ வசதிகளற்ற தூர இடங்களுக்கு சென்று சேவை செய்கின்றனர். டாக்டர்கள் பரிசோதித்த பின்னர் மருந்துகள் கொடுக்கப்பட்டு, அடுத்த தடவை செல்லும்போது முன்னேற்றத்தைப்பார்த்து மேலும் சிகிச்சை அளிக்கப்படும். முக்கியமாக நோய் தடுப்பு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. முன்னேற்றம் இல்லாதிருப்பின் மேற்கொண்டு சிகிச்சை செய்ய, பல ஆஸ்பத்திரிகளுடன் ஒப்பந்தம் உள்ளதால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவர். சுந்தரம் பேரிடர் காலங்களில் உடனுக்குடன் தேவைப்படும் இடங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி அனுப்புவதில் மும்முரமாக செயல்படும். இதைத்தவிர கஷ்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு ‘அமிர்த கலசம்’ என்ற அடிப்படை தேவைகள் கொண்ட ஒரு பெட்டி பவ்யமாகக்கொடுக்கப்படுகிறது. அனைத்து சமிதி அங்கத்தினர்களும் சுந்தரத்தை தமது இல்லமாகக்கருதி அவசியமான சேவைகள் புரிய விரைகின்றனர். இதை ஒழுங்கு படுத்துவதற்கு மாத அட்டவணை ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் போடப்பட்டு நடைமுறையில் கொண்டுவரப்படுகிறது.

சக்கர நாற்காலிகளில் உள்ளவர்கள் கூட சுலபமாக சுந்தரம் செல்லலாம். அது ஒரு “பசுமை கட்டடம்” என்பதில் பெருமை கொள்கிறோம்.

சாலை வழியாக, ரயில் வழியாக சுலபமாக சுந்தரம் வரமுடியும். அருகில் “பசுமைவழி” ரயில் நிலையம் உள்ளது.

விலாசம்:

’சுந்தரம்’, 7, சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை, 600028

சாய் ஸ்ருதி

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் கொடைக்கானல் ஆசிரமம் சாய் ஸ்ருதி. பிரசாந்தி நிலையம், பிருந்தாவனத்திற்கு அடுத்ததாக அதிக நாட்கள் இங்கு தங்கியுள்ளார். கொடைக்கானல் 2133 மீட்டர் உயரம் கொண்டு பழனி மலைத்தொடரில் உள்ளது. மதுரையிலிருந்து 115. 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு சீதோஷ்ண நிலைமை மிக நன்றாக உள்ளது. கோடை காலத்தில் புட்டபர்த்தியில் வெயில் மிகக்கடுமையாக இருக்கும். பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டின் பல இடங்களில் இருந்தும் வரும் பக்தர்கள் மிகவும் கஷ்டப்படுவதால் அவர்களுக்காக பகவான் பிருந்தாவன், ஊட்டி, கொடைக்கானல் என்று சென்று விடுவது வழக்கம்.

சாதரணமாக, சுற்றுலா வருபவர்களின் சீசன் மே மாதத்தில் தான் ஆரம்பிக்கும். பகவான் கொடைக்கானல் வர ஆரம்பித்ததால் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே வந்து அந்த நகரத்தின் வருமானம் அதிகரித்து சுபீட்சம் வந்தது. அவர் ஏப்ரல் மாதத்தில் வருவதால் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து குவிந்ததால் சாய் சீசன் என்று ஒன்று ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கியது. பழம்பெரும்பக்தர் ஒருவர் ஸ்ரீ சத்திய சாய் மத்திய அறக்கட்டளைக்கு ஒரு நிலத்தை 1983ல் அளித்திருந்தார். தரிசனம் கொடுக்க வசதியாக அங்கு ஒரு கட்டடத்தைக்கட்டுமாறு பகவான் கேட்டுக்கொண்டார். அது 1986ல் தயாராயிற்று.

1986 ஜூன் மாதம் 18ம் தேதி பகவானும் இன்னும் சிலரும் கார்களில் பிருந்தாவனத்திலிருந்து கிளம்பினர். பகவானது அழைப்பின் பேரில் ஒரு பஸ்ஸில் சில மாணவர்களும் பயணித்தனர். 19ம் தேதி மாணவர்கள் பஜனை பாட பகவான் பட்டுநாடாவை வெட்டி உள்ளே நுழைந்தார். மேல் மாடியில் மாணவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. பகவான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி மாணவர்களும், ஸ்ரீ ஜோக ராவ், ஸ்ரீ இந்துலால் ஷா, ஸ்ரீமதி ரத்தன்லால், ஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஸ்ரீமதி வித்யா ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ராகவாச்சாரி, ஸ்ரீ மோகன்தாஸ் நாயுடு ஆகியோரும் அமர்ந்தனர். பகவான்அவர்களிடம் இந்த வாசஸ் தலத்திற்கு என்ன பெயர் சூட்டலாம் என வினவினார். அவர்கள் கூறியது எதுவும் திருப்தி அளிக்காததால் பகவானே “எனது பிருந்தாவன் வாசஸ்தலத்திற்கு திரையீபிருந்தாவன் என்று மூன்று வேதங்களைக்குறித் து பெயர் வைத்தாற்போல இதற்கு சாய் சுருதி என்று பெயர் வைக்கலாம்” என்று கூறி மாணவர்களை வேதம் ஓதுமாறு பணித்தார். சாய் சுருதியில் அவ்வாறு தான் வேதம் ஒலிக்கத் துவங்கியது. அந்த அதிர்வலைகளும் பகவானின் பிரசன்னமும் பரமானந்தத்தை அளித்தது. அதன்பின் பகவான் வேதங்களின் அடிப்படைத் தத்துவத்தைப்பற்றி ஒரு அருளுரை அளித்தார். பகவானின் சம்பாஷணைகள் புத்தியைக் கூர்மையாக்கி, ஆன்மிக அனுபவங்களை அளித்து உன்னத நிலைக்கு உயர்த்தின. கட்டடத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. அநேகமாக ஒவ்வொரு வருடமும் மாணவர்களுடனும் தம் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுடனும் வந்தார். பகவானுடன் இருப்பதே எல்லையில்லாத ஆனந்தம். தங்கள் பிரபுவுக்கு பாட்டுகள் பாடினர். நாடகங்கள், வினாவிடை, புர்ரகதா என்ற நாட்டுப்புற நிகழ்ச்சி, கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், பஜனைகள் என்று பல்வேறு நிகழ்வுகள் அங்கு நடந்தன. பகவான் பல அருளுரைகளை ஆசியுடன் அளித்து சம்பந்தப்பட்ட பொருட்களை சிருஷ்டித்துக்காட்டி விளக்கினார். அமைதியும் ஆனந்தமும் நிரம்பிய அந்த இடத்தில் தங்கியவர்கள் ஒவ்வொரு நொடியும் இறை வாழ்விற்கான படிப்பினைகள் கற்றனர்.

பகவான் இருக்குமிடத்தில் எப்போதும் ஸ்ரீ ராமநவமி, ஈஸ்வரம்மா தினம், திரையீ தினம், புத்தாண்டு தினம். விஷு போன்றவை திருவிழாக்களாக விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாட்களில் வேதம் ஓதுதல், பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் தவிர நலிந்த பகுதி மக்களுக்கு நாராயணசேவையாக மிக சுவையான உணவும், வேஷ்டி, புடைவைகள், கம்பளி போர்வைகள் முதலியவை கொடுக்கப்படும். பகவான் தம் மாணவர்களை திபெத்திலிருந்து வந்த அகதிகளிடம், நடமாடும் கடை நடத்தும் சிறிய வியாபாரிகளிடம் வாங்கும்பொருட்களுக்கு பேரம் பேசாது தாராளமாக பணம் கொடுத்து வாங்குமாறு அறிவுரை வழங்கி இருந்தார். சாய் சீசனின் போது கொடைக்கானலில் மிகப்பெரும் எண்ணிக்கையில்ஆர்வமுடன் பக்தர்கள் வந்து தங்குவதால் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவது வழக்கம். கொடைக்கானல்வாசிகள் பகவான் அன்பையும் கருணையையும் பொழிவதால் பகவானின் வரவை எதிர்பார்த்துக்காத்திருப்பர். பகவானை நாடி வந்திருக்கும் பக்தர்களோ ஒவ்வொரு நாளும் ஒரு புது ஆர்வம், உற்சாகம் பீறிட தரிசனத்திற்கு செல்வர். ஏனெனில், கொடைக்கானலில் சுவாமியை மிகவும் சுலபமாக சந்திக்க, கோரிக்கை விடுக்க, கடிதம் கொடுக்க முடியும் என்று அறிந்துள்ளனர். பக்தர்கள் நடுவில் மிகவும் பிரியமாக அதிக நேரம் செலவிடுவார் பிரபு. விபூதியோ வேறு ஏதாவதோ சிருஷ்டித்துக் கொடுப்பது தினசரி நடக்கும் சகஜமான விஷயம். தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் பாதிக்குமேல் வெளிநாட்டினராக இருப்பர். மலர்கள் பூத்துக்குலுங்கும் இந்த அழகிய ஆசிரமத்திற்கு பகவான் கடைசியாக வந்தது 2009ல். அப்போது தெய்வீக அன்னை ஈஸ்வரம்மாவின் பஞ்சலோகத்தினாலான சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

சாய் சுருதியில் ஒரு சமிதி நடந்து வருகிறது. பஜனைக்கூடம் காலை7 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும். ஒவ்வொரு நாளும் காலை 9:00-9:30, மாலை 4:30-5:00 பஜனை நடக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் 4:00-5:00 பஜனை நடக்கும். மகாசிவராத்திரி, ஈஸ்வரம்மா தினம், ஆராதனா தினம், பகவானின்பிறந்தநாள் ஆகிய நாட்களில் 5000 பேருக்கு நாராயண சேவையும், வஸ்திரதானமும் நடைபெறுகிறது. வருடத்தில் இரு தடவை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பகவானால் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் பொக்கிஷமாகப் பேணப்பட்டு ஒரு கண்காட்சியாக பக்தர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அன்பே உருவான பகவான் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது எடுத்த அரிய படங்களை பக்தர்கள் காண ஒரு நிரந்தர கண்காட்சி உள்ளது.

சமீபத்தில் மிகப்பெரிய அளவில் செப்பனிட்டுப் புதுப்பிக்கும் வேலை நடந்துள்ளது. முழு வசதியுள்ள அறைகள் உள்ளதால் மாவட்டஅளவில் கூடுவதற்கும் சாதனை முகாம்கள் நடத்தவும் வசதியாக உள்ளது. நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. சென்ற வருடம் மூன்று நாட்களுக்கு அகில இந்திய யுவர்களின் மாநாடு நடந்தது. அதில் அகில இந்தியத் தலைவரான ஸ்ரீ நிமிஷ் பாண்டியா உரையாற்றினார். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் மாநாடு ஒன்றும் நடைபெற்றது. ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாகினி பயிற்சி முகாம்கள் நடந்துள்ளன. பகவானின் ஆணைப்படி கிராமங்களில் உள்ள நலிவுற்றோருக்கு உதவுவது என்பது இடைவிடாத ஒன்று. 40-50 ஈஸ்வரம்மா அன்னை சிசு கவனிப்பு பேழைகள் மதம் தோறும் அவசியமுள்ள தாய்மாருக்குக் கொடுக்கப்படுகின்றது. ஒரு தனிப்பட்ட நிறுவனம் அங்கன்வாடிகளைப் புதிப்பித்துள்ளது. அத்துடன் இங்குள்ள சமிதியுடன் கைகோத்து வேலையற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் செயல் திறம் உள்ளவர்களாக, நல்ல மேம்பாடுகள் உள்ளவர்களாக மாற்றி விடும் சாதனை படைக்கின்றனர். மற்றவர்களுக்கு உதவுவது என்பது ஆன்மிகமாக இருப்பின் சேவை என்று அழைக்கத் தகுதி பெறுகிறது. மக்களை வாழ்க்கைத்தரத்தில் உயர்த்துவதுடன் ஒரு ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று பகவான் கூறியுள்ளார்.

ஆனந்த நிலயம்

In the early years of Sri Sathya Sai Baba’s Advent, Baba used to travel extensively, mainly in the southern part of the country, especially the present Tamil Nadu districts. The city of Madurai famous for its ancient temple of Divine Mother Meenakshi, was a blessed witness to such visits on several occasions. Baba had laid foundation to build a township to be developed in Madurai in the 1960s. Ultimately, a colony of residential buildings came up over this site. This colony is now known as ‘Sri Sathya Sai Nagar’.

As years passed by, the awareness of Baba’s divine message and universal teachings of love and service, began to capture the hearts of the people of Madurai. Many centres for organising service and spiritual activities emerged in various places. This situation prompted one of the prominent citizen of the town and a devotee of Baba, Sri Subramaniya Chettiar to conceive the idea of a divine abode for Sri Sathya Sai Baba at Madurai for His stay and also provide convenience for the thousands who would gather to participate in various activities and spiritual programmes. In September 1998, Baba very graciously showed His green signal for the commencement of the Ananda Nilayam construction at Madurai. The construction was completed within 5 months with the dedicated efforts of the devotees.

Baba visited Madurai on the 22nd April 1999, and consecrated the Sri Sathya Sai Ananda Nilayam. A Paduka Peetham (pedestal) with design of a Paduka (sacred foot impression) inscribed on black granite has been installed in Ananda Nilayam. During a Divine visit, Baba consecrated the granite Peetham for about 15 minutes by standing on it.

Almost every summer since 1999, on His way to Kodaikanal, Baba visited Ananda Nilayam. True to its name, this shrine of selfless Love of Baba brings-forth ananda (bliss) to thousands of devotees who gather there.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0