சுந்தரம் சுந்தரமே

ஐம்பத்தைந்து அடி நெடிதுயர்ந்து மிகுந்த பொலிவுடன் கம்பீரமாக விளங்கும் சுந்தரம், அவதார புருஷரின் ஐம்பத் தைந்தாவது வருடத்தில் அவரது திவ்விய வாசஸ்தலமாக புனிதமாக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு பகவான் அன்புடன் அளித்த பொக்கிஷம் அது. 1976ல் ‘சுந்தரம்’ என்ற பெயரில் அங்கிருந்த கட்டடம் தான் 1981ல் அவ்வாறு மாறியது என்று கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள். அத்தகைய மாற்றம்! அது ஈசனின் காவியம். அதன் சில்பி, ஸ்தபதி, வடிவமைப்பாளர் அனைத்துமே சுந்தரமூர்த்தியாக இருக்கும்போது அந்தக் கவின்மிகுகோயில் சுந்தரமாகத் தானே இருக்கமுடியும். இந்த அழகிய காவியத்தை நாடி உலகின் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.

தெய்வீக அதிர்வலைகளுடன் அமைந்துள்ள சுந்தரம், அவசரகதியில் பறக்கும் தினசரி வாழ்வின் சவால்களுக்கு, கவலைகளுக்கு இதம் தரும் மருந்தாக விளங்குகிறது. மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுள்ளவர்களுக்கு பல்வேறு சேவை வாய்ப்புகள் இங்குள்ளதால் சேவையில் ஈடுபட்டு ஆன்மிக திருப்தி அடைகின்றனர். தனிமையில் தவிப்பவர்கள் இங்குள்ள சாய் குடும்பத்தின் அன்பில், அரவணைப்பில் இறைவனின் அன்புக்கரத்தையே காண்கின்றனர். மேலும் படிக்க > >

புத்தகங்களை வாங்க

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0