மார்கழிப் புனிதத்தின்

  • குறையேதும் இல்லை திருவே உன் நிறையில்
  • இறையே உனைத்தொழு தலன்றிவேறேது பணியே
  • மறையும் நீ, மறை பொருளும் நீ, மறைத்தலும் நீயானாய்
  • அருளும் நீ, பொருளும் நீ,
  • அருள்தருமுன் அழகோவியமானாய்த்தான் அன்பாய்
  • மருந்தும், விருந்தும் நீ, மற்றெல்லாமும் நீயாகினாய்,
  • எந்தை தந்தை, முன்னையுமே நீ தானே
  • இச்சென்மத்திலிறையா, யவதரித்துமே, நீ தானெங்களின்
  • நல்வரமானாய், நல்வரவுமானாய்
  • சொந்தபந்தம், சுற்றம், நட்பு, உற்றார் உறவினர்,
  • சகா, அன்னை, தந்தை, உறவு நட்பெனச், சகலமும்
  • சாஸ்வதமானாய்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை,
  • சகிப்புத்தன்மையுடனான சனாதன தர்மம்,
  • விட்டுக்கொடுத்தல், என்றும்
  • இன்சொல்லுடன் இறை யுன்சேவைகள்
  • இனிய வாழ்வியல், தந்தும் அபயமளிக்கின்றாய்
  • பன்மதப் பக்தரும் அவரவர் இயன்றளவு ஆன்மீகச், சமூக,
  • சமுதாயக் கல்வி, மருத்துவம், நாராயண சேவை
  • களிலென்றும் தொடர்ந்திருக்கத் துணையாய்
  • நீ தொடர வேண்டும், அருள் பரவவேண்டும்
  • தொடர்ந்து நீயும் வந்தேவுன் கருணையன்பு
  • வரம் அளிக்கவேண்டும் பாபா
  • மார்கழிப் புனிதத்தின் மாண்பாய் பர்த்திப் பிரசாந்தியின்
  • சீலமாய்க் கருவறைத் தெய்வமுன்னருட் கருணை
  • அருள்பிரேமை அன்பு என்றும்
  • அனைத்துயிர்களுக்கும் கிட்ட வேண்டும்,
  • உன் பிரேமை நிறைய வேண்டும்
  • பரப்பிரும்மமுன் பாதாரவிந்தம் பணிய அன்பு தெய்வமுன்
  • சங்கல்பம் சாத்தியமாக வேண்டும்
  • சத்தியச் சாத்வீகம் நிலைக்க வேண்டும்
  • உன் வியாபகம் வியத்தகு அதிசய அற்புதங்கள்
  • புரிய வேண்டும்
  • அவரவர் தெய்வமாயுன்னருட்காட்சி கண்டு
  • ஆனந்தம் அடைய வேண்டும், உன்
  • சரணத்தில் பணியவேண்டும் சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0