மந்த மாருதமாய்

  • மிதிலையின் நாயகனாம் சாயி ராமா உன் மதிவதன
  • மந்தகாசம் மனவானில் மந்த மாருதமாய்ச்
  • சுந்தரமாய்த் தெரியும்
  • புதுப்புது அர்த்தங்களும் பலப்பல அற்புத லீலைகளும்
  • அழகழகாய்த் தெரியும், ஆனந்தமயம் உதயமாகும்
  • கற்பனைக்கெட்டா ஆச்சரியங்களும் அதிசயமாவதும் புரியும்
  • கலியவதாரம் கலியுகக் கண்கண்ட அயோத்தியின்
  • அருமருந்தாம் நீ பர்த்தியின் ஆன்மீக நற்பவி
  • சனாதன விருந்தே சுவாமி
  • பாரினில் உன் அருளன்பு அறவுரைகளே
  • திரு மந்திரங்கள், திருப்பதிகங்கள், திருப்பாசுரங்கள்,
  • திவ்யப்பிரபந்தங்கள் சுவாமியுனது பக்தர்களுக்கே
  • உன் சத்தியப் பாதையில் கீதை வழி நடந்திட
  • ஸ்ரீ சத்ய சாயி ராமனே – நீ
  • நித்தியமாய் நிர்மலமாயருள்வாயே சுவாமி
  • அலை, கலை, மலை, மகள்களின் சக்தித் திருவுருவாய்த்
  • தருவாய், கற்பக விருட்சமாய்ப் பல்கலையும்
  • பல்சுவையும், பலநிலையும், அருமருந்தாய்
  • ஔஷதமாய், ஆன்ம ஞானமளித்தே அருள்புரிவாய்
  • ஆத்ம சுகமளித்தே முக்தி தருவாய், மனமுதிர்ச்சியளிப்பாய்
  • இகபர சுகம் தந்து சம்சாரசாகரக்கடல் கடத்தித் தருவாய்
  • முன்னின்று காத்தருளி, முடிவுரையாகி நிற்கிறாய்
  • பரமாத்ம சத்ய சாயி நாதனுக்குப் பங்கய மலர் வந்தனம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0