வேதாகமத்தில்

  • சப்தரிஷிகளின் வேதாகமத்தில் வேள்வியாய் உள்ளாய்
  • சப்தஸ்வரங்களின் இசையில்
  • இராகமாலிகையா யிசைந்துள்ளாய்
    சப்தஒலியிலும் நிசப்தமாம் ஓம்காரச் சக்தியாயுள்ளாய்
    சப்தப்பரிகளின் தேர்பவனியில் உற்சவ மூர்த்தியாயுள்ளாய்
  • சப்தவிடங்கத் தலங்களிலும் சாந்நித்தியமா யுறைந்துள்ளாய்
  • சப்தநதிகள் சங்கமிக்கும் கருணா சாகரமாயுள்ளாய்
  • சப்தகன்னியர் வடிவிலும் சக்திஸ்வரூபிணியாய்க்
  • காட்சியளிக்கிறாய்
  • சப்தமண்டபங்களிலும் ஓங்கார உரு, ஒளியாய்,
  • ஒலிக்கின்றாய், ஒளிர்கின்றாய்
  • சப்தஆழிகளிலும் உயிர்களின் ஆழ் மன
  • ஓசையாயிருந் தவற்றின் வடிவமாகினாய்
  • சப்தஒலியிலும் நிசப்தமாய் அமைதியுருவாயுள்ளாய்
  • சப்த பிறப்பிலுமெங்களின் துணையாய் நீ வரவேண்டும்
  • புட்டப்பர்த்தித் தலஅவதாரமாகி அவனியனைத்திலும்
  • அங்கம் வகித்து அன்பு அருளாட்சிதான் புரிகிறாய் சுவாமி
  • உன் ஸ்பரிசனம், சம்பாஷணம், தரிசனம் கிட்டிய அன்பர்களின்
  • ஆனந்தத்திற்கு எல்லையுண்டோ சுவாமி?
  • உன் நயன தீட்சையே உன் பேரருள்
  • சங்கல்பம் தானே ! உன் இதய தீட்சையே
  • பக்தர்களின் உதயக் காட்சிதானே சுவாமி ?
  • சரணம் போற்றி ஆத்ம வந்தனம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0