அபயகர மலை தூக்கும் சத்ய சாயி கிருஷ்ணன்!

துவாபர யுகத்தில் மட்டுமல்ல இந்தக் கலியுகத்திலும் சத்ய சாயி கிருஷ்ணரே தன் பக்தர்களைக் கவசமாய் நின்று காவல் காப்பதால் நிகழ்பவை யாவுமே நன்று.. தர்மமே என்று உணர்ந்து சரணாகதி அடைவோம். 
துவாபரயுகத்தில் இருண்ட மேகத்துடன்
பலத்த மழை இந்திரனால் ஏற்பட காரணமாயிற்று. காற்று வீசுகிறது. மழை பொழிகிறது

பாதிக்கப்பட்ட மக்கள் இறைவனிடம் பிராா்த்திக்கின்றனா்:

“ஓ இறைவா! கால்நடைகள், நாங்கள் அனைவரும் பலத்த மழையின் காரணமாக துன்பமடைகிறோம். இந்த பெருமழையிலிருந்து காப்பாற்றுவாயாக”

இறைவன் பதிலளிக்கிறாா் :

” நான் இந்த மழையினை நிறுத்தப்போவதில்லை. இயற்கையின் கூற்றுப்படி எது நடக்கிறதோ அது நடக்கட்டும்.ஆனால் சரியான வகையில் பிரதிகூலமான விளைவுகளிலிருந்து உங்களை காத்திட எனக்கு உரிமை உண்டு. இயற்கையின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு மழை வருகிறது.இவைகள் இயற்கையின் முறையான வழியின் அபூா்வ சம்பவமான வழிகளாகும்.ஆனால், உங்களது மரியாதை மிகுந்த பக்திக்கும் மற்றும் பிராா்த்தனைகளுக்கும், இந்த குன்றினை  மேலே தூக்கி நிறுத்தி உங்கள் அனைவருக்கும் புகலிடம் அளிப்பேன். ஆனால் இந்த மழையினை நான் நிறுத்த மாட்டேன்”
(ஶ்ரீ கிருஷ்ணா் கோவாத்தன மலையினை மேலே தூக்கி நிறுத்தியதற்கான குறிப்பு)
ஆதாரம்: பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளுரை−22/05/1992)

இறைவன் சத்ய சாயி துவாபர யுகத்தில் மட்டுமல்ல இந்தக் கலியுகத்திலும் நம்மைக் காவல் காத்திடவே கணப்பொழுதும் கருணை பொழிகிறார்.

அப்போது இந்திரனால் மழை வெள்ளமானது இப்போது இறைவன் சத்ய சாயியால் கருணை மழை வெள்ளமாய்ப் பொழிகிறது..

அப்போது ஒரே ஒரு சுண்டு விரல் நீட்டி மலையைக் குடையாக்கினார்..

இந்தக் கலியுகத்தில் சத்ய சாயி கிருஷ்ணனோ இரண்டு கைகளையும் தூக்கி அருளை மலையாக்கி.. நம் நம்பிக்கையை திடமாக்கி… காவல் குடை நீட்டுகிறார்..

நாம் செய்ய வேண்டியது என்ன?
ஒன்றே ஒன்று தான்..
சத்ய சாயி கிருஷ்ணனிடம் சரணாகதி அடைந்து அவர் நீட்டும் காவல் குடைக்குள் வந்துவிட வேண்டும்..
எந்தக் கிருமியும் நம்மை எதுவும் செய்துவிடாது..

அவர் நாமமே நமக்கான வெப்பம்.. அந்த அருள் வெப்பமே உலகத்தில் பரவிக் கொண்டிருக்கும் நோய்களுக்கு எதிரான மறுமுனை தாக்குதல்.

இறைவன் சத்ய சாயி இருக்க பயமே இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0