எங்குமெதிலும்
- தபோவனத் தலத்தின் விருட்சம் உன்
- தயாநிதித்வத்தைப்போல் தயைசெய்கிறது
- நந்தவனப் பூக்களின் நறுமணம் எங்களின்
- சொந்த மனத்தோட்டத்திலுந்தன் மகிமைகளைச்
- சொல்லியே நறுமணம் வீசுகிறது
- வையகத்தில் எந்த இடம், காடு, மலை, கடல், பன்நாடுகள்
- ஊர், கிராமமாயினும் வீடுகள், போனாலுமங்குன்
- பாந்த, பந்த, பன்மதப் பக்தர்கள்,
- கூட்ட அன்பர்களினருகாமை
- அருமருந்தாய் நட்பாய்க்கிட்டி அன்பைப் பொழிகிறது
- அது உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து உன் ஆத்மார்த்த
- அத்தியந்த பக்தி மகத்துவத்தைச்
- சொல்லி ஆனந்திக்கிறது சுவாமி
- எங்கும் நிறையுன்போலுன்னருட் கடாட்ச மிலா
- இடமேதுலகில் சுவாமியுனைப் பார்க்க, பேச,
- நினைக்க, உன் அருளன்பை,
- கருணையை கொடையை, அனுபவித்தும்,
- அனுசரித்தது மானந்தப் பதில்தானே,
- தானாய் ஆனந்த இன்பம் கிட்டுகிறது,
- அப்பக்தி உன்னில் எட்டுகிறது
- ஞாயிறும் ஞாலமும் ஞானமும் திங்களும் பஞ்சபூதங்களும்
- உனையன்றி வேறில்லை சுவாமி
- பஞ்சபூதங்களில் உன் நியதியன்றி யாதுமில்லை
- பஞ்சபுலன்களிலும் உன் அளப்பரிய
- கருணையன்றி ஏதுமில்லை
- பரப்பிரும்மம் ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே
- உனக்கு ஆத்ம வந்தனம். சரணாகதம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்