சதிபதியாய் வாழ

  • வளியில் ஒளியாகி நிற்கிறாய்
  • ஒளியில் வெளிச்சமாய்த் தெரிகிறாய்
  • களிப்பில் உற்சாகமளிக்கிறாய்
  • வளமாய் வாழ்வியல் வாழ்ந்திட உத்வேகமளிக்கிறாய்
  • சதிபதியாய் வாழச் சங்கல்பம் அருள்கிறாய்
  • கதி நீயெனச் சரணடைந்தோர்க்கு நற்கதி நல்குகிறாய்
  • பதி நீ பசுக்களுக்குப் பாந்தமாய் பந்தமாகிறாய்
  • விதிவசம்கூட உன்னருட்கருணையாலுன் வயமாக்குகிறாய்
  • நதியாய் ஓடி வந்தருள்கிறாய்
  • கடலாய் விரிந்து வியாபித்து மகிழ்வித்து மகிழ்கிறாய்
  • படகாய் சம்சார சாகரத்தில் வந்து மீட்கிறாய்
  • குடகு, கயிலை, பொதிகையாய், இயற்கையில்,
  • பிரக்கிருதியாய் உறைகிறாய்
  • இன்பமயம் இல்ல உள்ளமெல்லாம் சாயிமயம் வயம் லயமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0