சத்தியத் தேரோட்டி
- சத்தியத்தேரோட்டி சனாதன சாரதியாய் வந்திட்டாய்
 - நித்திய தர்மமதைத் தழைத்திடவே செய்திட்டாய்
 - அவதாரமாய் அவனியில் வதரித்து பவதாரமாகி நின்றாய்
 - அணுவுக்குள்ளணுவாகி அண்ட மதைக் காத்திடத்தான்
 - சிவசக்தியாக வந்தாய்
 
- பிருந்தாவனப் பெருமானே நந்தவனத்தின் நந்தகோபனே!
 - ஆநிரை மேய்த்திட்ட ஆயர்பாடியனே ! அரி அரனே !
 - திருந்தா வுள்ளத்தையும் திருப்தியுடன் திருந்த வைத்தும்
 - பொருந்தா மனத்தினிலும், புரிந்து வந்து கருணை செய்தும்
 - வருந்தாமல் வாழ்வியலில், வாழ்வாங்கு வாழவேதான்
 - வழி செய்கின்றாய்
 
- இருந்தே உடன்நல்விருந்தாய், உயிரிலே கலந்துள்ளாய்
 - ‘நானிருக்கப் பயமே’னென்று நல்வாக்குமே தந்து விட்டாய்
 - ஸ்ரீ சத்திய சாயிநாத தெய்வமே உனக்குக் கோடிகளில்
 - ஆத்மார்த்த வந்தனங்கள் சுவாமி.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: