சாயின் வாக்கு

  • நித்தியமும் சத்தியமும் சாயி சங்கல்பம்
  • நிர்மால்யமும் நித்திலமும் சாயின் வாக்கு
  • நிரஞ்சனமும் சுபிட்சமும் சாயி வார்த்தை
  • நித்தியானந்தனாய் இறங்கி, இரங்கி வருவதே சாயின் தர்மம்
  • பரமானந்தனாய்ப் பக்தனுக்கிசைவதே சாயி சனாதனம்
  • கருணைக்கடல் கருணாகரன் சாயியே
  • வரமுமெங்களின் பிறவிப்பயனும்தான்
  • பஜன் சங்கீதமும் நாமசங்கீர்த்தனங்களுமெங்களின்
  • நித்தியப் பாராயணங்களாய் எங்கள் தெய்வமே
  • அஷ்டோத்திர சஹஸ்ர நாமம் சாயி காயத்திரி
  • தானெங்கள் வாழ்வியலின் கவசமே
  • சாயி இலக்கியங்கள் தானெங்களின் வாழ்வாதாரக் கவசமே
  • ஸ்ரீ சத்திய சாயி நாதா சரணம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0