சூரிய சந்திரனாய்

  • மணம் வீசும் மலர்களிலுன்வாசம் – உன்
  • அத்தியந்த ஆத்மார்த்த பக்தர் மனங்களில்தான்
  • உன் நிரந்தர வாசம்
  • என்றுமே உன் அடியார்கள் பக்த அன்பர்கள் மேலுந்தன் நேசம்
  • எங்கள் பக்திமீதுதானுன் பாசமது கருணை
  • அன்றுமின்று மென்றுமே சாயி நீதானே
  • எங்களின் சுவாசம், சுவாசகம்
  • உன் சத்சங்கம் பஜன் சேவைப்பணிகளின்
  • சேவகர்கள்தானெங்கள் சகவாசம்
  • உன் நாமஸ்மரணை ஜெபதவம் தானெங்கள் சுகவாசம்
  • பரப்பிரம்மம் நீதானெங்கள் பரம,
  • பவித்திரப் புனிதம் சுகம், சுபம்
  • வியாழனில் குரு தெய்வமாய், வெள்ளியில் விடிவெள்ளியாய்
  • சூர்யசந்திரனாய்ப் பஞ்சபூதங்களாய் எங்கள்
  • ஸ்ரீ சத்திய சாயி நாதா நீ வரவேண்டும் அருள்நீ
  • தர வேண்டும் உன் மலரடி சரணம் ஈசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0