ஞான ஞாயிறாய்

  • நீலக்கடலின் வண்ணமாய் நீதானிருக்கிறாய் – அம்
  • மாலக் கடவுளின் எண்ணமாய்த் தானொளிர்கிறாய்
  • வேலக்கந்தனும், வேழமுகனும், சிவ, ராம, கிருஷ்ணன்,
  • எனப் பன்மதப் பக்தரின் சன்மத, சனாதனத் தெய்வமாகினாய்
  • அவரவர் இதயதெய்வமாய்த் தெரிகிறாய்
  • அற்புத மகிமைகள் அனைவர்க்கும் புரிகிறாய்
  • உன் பொற்பதம் மலரடியைத் தஞ்சமா யளிக்கிறாய்
  • அறிவிற்கடங்கா, ஆச்சரியமாய் அருட்கருணை தருகிறாய்
  • மாமாங்க, மா தவத்தில் அவதரித்தருள வந்த மாதவா
  • கலியுக அவதாரக் கற்பகமே ஞாயிறில் ஞான மருள
  • ஞாலத்தின் சனாதன சாரதியாய்ச் சங்கமிக்க சங்கநாதமாய்
  • வரவேண்டும், உனக்காத்மானந்த வந்தனம் சுவாமி போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0