தெரிந்து தேர்ந்தெடுத்த தாய்
- ஈஸ்வரனின் தாயே ஈஸ்வரம்மா இன்றுன் நினைவில்
- ஈசனின் நினைவும் சங்கமிக்கின்றதம்மா
- மூன்று உருண்டைகள் முக்கண்ணனுக்காக அளித்தாயே !!
- முப்புர சம்ஹாரகாரனின் தாயாய் உன்னை
- நினைத்துப் பேச வைத்தாயே !
- பால சாயின் அவதாரத்தில் பல வகை
- லீலைகள் பார்த்திருப்பாய்
- சீரடி சாயின் தெய்வீகப் படச்சுருளுன் மகளுக்குக்
- கிட்டியதும் (வெங்கம்மா)
- கற்பக விருட்சத்தில் ஆப்பிள் ஆரஞ்சு, மா திராட்சை,
- பறித்துக் கொடுத்ததையும்
- சித்திராவதி ஆற்று மணல்பரப்பிலும்,
- குன்றின் மேலும், பலவிதக் காட்சிகள்,
- அற்புதங்கள் நீ கண்டிருப்பாய்
- முக்கண்ணையும், இருளில் பேரொளி
- தெரிந்ததையும் அறிந்திருப்பாய்
- புரோகிதருக்கு நரசிம்ம அவதாரத்தையும்
- சுகாதார அதிகாரிக்கு நெற்றியில் சோதியையும்,
- பக்தர்க்கு தசாவதாரங்களையும், மலர் ஊஞ்சல்,
- பிருந்தாவனக் கண்ணனையும்,
- வேய்ங்குழல் கீதம், நாதத்தையும், சுவாமி அளித்த
- பல லீலைகளைக் கண்டும் கேட்டும் பார்த்தும்
- ரசித்தும் இருப்பாய் அம்மா
- சுவாமியின் அருட்கருணைப் பேரானந்தத்தில்
- கலந்து சங்கமித்த நதிகள் பல பார்த்திருப்பாய்
- சுப்பம்மா அம்மாவுடன் நீ சீரடி சமாதிக் காட்சி பார்த்து விட்டாய்
- சச்சிதானந்தரருக்களித்த அறிவுரையில்
- சாத்வீகத்தை உணர்ந்திருப்பாய்
- பிணி தீர்க்கும் வைத்திய நாதனாக உன்
- தனயனைப் பார்த்திருப்பாய்
- மைசூர் அரச வம்ச அன்பு பக்தியையும், அறுவை சிகிச்சை
- அத்தியந்த பக்தனுக்குச் செய்ததையும் பார்த்து இருப்பாய்
- கடலிலே ஆதிசேஷன் சயனக் காட்சி,
- கடல் நீரிலே தேவாமிர்தம் தந்தது
- பால சாயின்லீலா வினோதங்கள் – என
- எத்தனையோ பார்த்திருப்பாய்
- கல்வி, கட்டிட, மருத்துவ, நாராயண சேவை, குடிநீர்,
- பக்தர்களுக்கு அன்பான ஆறுதல்,
- அன்புச் சிபாரிசுகள் இப்படி உன்
- சேவைகள் எத்தனையோ எப்படியோ நீண்டதம்மா
- மலரும் நினைவுகளாய்ச் சில லீலைகளை
- அசை போட்டதுதான் அம்மா இவை>
- அறிவில் அடங்கா அற்புதங்கள் பல உள்ளதம்மா பின்னே
- தாயாய் அனைவர்க்கும் தயையாய் சுவாமியே
- தேர்ந்தெடுத்த தெரிந்தெடுத்த தாயே
- இப்பிறவிக்குத் தேர்ந்தெடுத்ததாய் நீதான்
- என்றுரைத்த பகவானுடன் இந்த நினைவுகளை
- ஸ்வாமியுடன் நினைந்து உன்னை போற்றுகிறோம்
- அம்மா நினைந்து உன்னப் போற்றுகிறோம் அம்மா
- ஸ்வாமியின் சரிதச் சரித்திர நாயகித்தாயே!
- தவமே அனைவரையும் அன்புடன் காத்து
- என்றும் துணை இருப்பாய் தாயே
- என்றும் துணை இருப்பாய் தாயே
- உனைப்பாட இக்கருணை அளித்த நம்
- பகவானுக்கு நன்றி தாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்