நிலா முற்றத்தில்
- செவ்வக வடிவ நீள்முற்றம்
- அண்ணாந்து மேலேபார்க்க முழுநிலவு முற்றும்
- வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி
- செவ்விளநீரின் குளுமையாய்ப் புன்முறுவலுனதாய்
- ஓ! நம் சுவாமி
- செவ்வங்கிதனில் தங்கம்நிற ‘பங்காரு’ என்றழைத்திடும்
- நம் சுவாமி
- செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம்
- செந்தாமரைப் பாதம் நினைக்கச் சிந்தூரமாய்ச் சுந்தரப் பாதம்
- பந்தமாய்ப் பார்க்கும் பிரேமைப் பார்வையில்
- பாந்தமாய்த் தெரியும் பாசமான போர்வையில்
- எங்கள் சொந்தம் நீமட்டும் தானென்று
- நினைத்திடும் கோர்வையில்
- பரப்பிரும்மம் உன்னில் தீர்வாய்ச் சேர்கையில்
- அது பிரசாந்தியில் பிரவேசமாகிறது
- கார்முகில்களின் நகரும் மேகக்கூட்டத்தில்
- கண்சிமிட்டும் நட்சத்திரக்கூட்டங்களில்
- நீல வண்ணக் கண்ணனைக் காண எண்ணமெழுகையில்
- நீலமேகச் சியாமளனாய் நித்திலமாய் வேணுகான மிசைத்திட
- வேய்ங்குழலூதி நீ வந்தாயே சத்யசாயி கிருஷ்ணணாய்
- வேல்கொண்ட கையில் மயில் வாகனத்திலேறி மயூரனாய்
- வில்லேந்திய கரத்துடன் சீதா சமேத இலக்குமணனன் சகித
- அனுமனுடனான அழகுக்கோலத்தில் ஸ்ரீ சாயிராமனாய்
- சங்கு சக்ரமேந்தி ஸ்ரீதேவி பூதேவியுடனாய்க்
- கருடவாகனத்தில் மகாவிஷ்ணுவாய்
- சிவசக்தி ஸ்வரூப லிங்கோத்பவனாய்
- கயிலைக்காட்சியில் ஸ்ரீ சைலேஸ்வர பிரம்மராம்பிகை
- ஸ்வரூப ஸ்ரீ சாயீஸ்வரனாய்
- வீணாவாணி கலைவாணியாய், பிரம்மபத்தினியாய்
- வெண்தாமரையில் வீற்றிருப்பவளாய்
- முத்தேவியராய் முத்தமிழாய்க் கல்வி,
- செல்வ, வீர சனாதனியாய்
- தேவி சண்டிகையாய், ஆதிசக்தி, சப்த மாதாக்களாய்ப்
- பஞ்சபூதங்களாய், அகிலமனைத்தும் ஆட்சி செய்விக்கும்
- சாயி அன்னையாய் எப்படி நினைக்கினும் பாபா
- நினைப்பவர்க்கு நினைத்தபோது நினைத்தவாறு
- காட்சிதருவாய் கற்பனையிலும் கனவு நனவிலும்
- காட்சி மீட்சி மாட்சியினில் என்பது சத்தியம்
- சுவாமியுனை முப்போது மெப்போது மிப்போதும்
- நினைத்திட வரமருள்வாய் சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: