மகத்துவம் தனித்துவம்
- சுவாமி உன் அன்பு என்றுமே அனைத்திலும் மகத்துவம்
- சுவாமி உன் கருணை இன்றுமே
- ஒவ்வொருவரிலும் தனித்துவம்
- சுவாமி உன் அன்பு அருள் அறவுரை
- என்றுமே பாண்டித்தியம், பரமனுன் தத்துவம்
- சுவாமி உன் ஒவ்வொரு அசைவிலும் இதிகாசம், அத்தியாயம்
- பக்தர்களின் அனுக்கிரக சங்கல்பம்
- சுவாமியின் நாமசங்கீர்த்தனம் நாவினிலென்றும் நர்த்தனம்
- சுவாமியின் பஜன்பண்க ளொவ்வொன்றுமே கீர்த்தனம்
- சுவாமியின் பாடும் பாடல் கேட்கையில் இதயத்தில்
- ஊடுருவும் ஆத்மார்த்தம்
- சுவாமியின் தியானம், ஜபம், நகர சங்கீர்த்தனம், பரமார்த்தம்
- சுவாமியின் தரிசனம் கிட்டியவர்களுக்கு
- எப்போதும் ஆனந்தம்
- சுவாமியின் கரிசனம் பெற்றவர்க்கு இப்போதும் பரமானந்தம்
- சுவாமியின் ஸ்பரிசனம் அடைந்தவருக்கு
- முப்போதும் பேரானந்தம்
- சுவாமியின் நினைவலைகள் தருமே
- பக்தருக்கென்றுமே நித்தியானந்தம்
- சுவாமியி னொவ்வொரு அசைவும் பக்தர்களுக்கு அத்யந்தம்
- சுவாமியின் அங்கை அசைப்பில் அனுபூதியாகும்
- விபூதிப் பிரசாத மந்திரம்
- சுவாமியின் புன்முறுவல் பூத்திருக்கும்
- புதுப்பூவின் மலரத்துவம்
- சுவாமியின் சேவைகள் அனைத்தும்
- சந்ததிகளைக் காத்திடும் சாகித்தியம்
- சுவாமியின் ஆசி என்றுமே அன்பருக்கு
- அபயஹஸ்த பொக்கிஷம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: