முப்போதும் வருவாயே
- திருப்பாவை ஆண்டாள் நாச்சியாரின் ஆத்ம பக்தியில்
- அகிலம் உறையும்
- மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில்தான்
- ஆத்மார்த்த பக்தியில் அன்பர்களுள்ளம் நிறையும்
- அலை கலை மலைமகளாயுனைத்துதித்திடும்
- அத்தியந்தப்பக்தர் களுள்ளம் உருகிடும்
- திரு உன் வடிவத்திலே அவரவர் தெய்வ மாயகமதில் தெரியும்
- உன்னன்புக்கருணைக் கொடையால்தானே, தானே புரியும்
- உன் இறங்கலும், இரங்கலும், உணரும்
- பாவை நோன்பும், மார்கழித் திங்களில் பர்த்தியில்
- நகர சங்கீர்த்தனம், நாம ஸ்மரணை, கீர்த்தனைகள்,
- பல்லக்குப்பவனி பாரெல்லாம் உணர்த்தும்
- தேடிவந்துனைத்தொழுதிட உன் அன்பர், பக்தர்,
- அடியார் கூட்டம் குவியும், குதூகலிக்கும்
- எப்பெயரில் இப்போது முப்போதுமெப்போம் உனை
- அழைத்தாலும் நாடிவந்து காத்தருளும்
- ஸ்ரீ சத்திய சாயி தெய்வமே உனக்கு
- ஆத்மார்த்த, ஆனந்த, வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்