வியாபித்திருப்பாய்

  • சாயி முருகாவுனைச் சரணடைய சங்கடங்கள் தீரும்
  • தாயி கந்தனாய் நீ வந்தெங்கள்
  • சொந்தனாய்க் கருணை தருவாய்
  • சாயி சரவணனுன் காவடிச்சிந்து கவலைகள் போக்கும்
  • சாயி வேலனாய் வந்தே வடிவேலவனாய்க் காட்சி தருவாய்
  • சாயி சரவணபவனுனை அபிஷேகித்தகம் மகிழ
  • சாயி கடம்பனாய் வந்தெமக்கு இடுக்கண் களைவாய்
  • சாயி சேந்தனுன் திருவடி தொழுதிட குருவடியாய்த் தெரிந்திடும்
  • சாயி கதிர்வேலனுனைக் கதிர்காமத்தில் கண்டாலும்
  • கனவு நனவிலும் காணுமிடமெங்கும்
  • நீ வியாபித்திருப்பாய்
  • சாயி சண்முகநாதனுன்தாள் பணியப்
  • பல்வினைகள் பறந்தோடும் பரமே
  • பிரசாந்தி சாயி சுப்ரமணியனுன் அன்புக்கருணையில்
  • சந்ததிகள் அழகாயுன் சேவைகளாற்றியே
  • வாழும் சாயி முருகா, குகா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0