சாயி துர்கா
- ஆதாரம் நீதானே சாயி துர்க்கா சாயிமா
- சேதாரம் ஏதுன் பாதார விந்தம் பற்றினோர்க்கே
- கேதாரனின் பாதி நீ பிரகதாம்பிகைத்தாயே சாயிமா – உன்
- பாதார விந்தம் பணிந்திடப் பாங்குடன் பரமனுடன்
- வந்திடுவாய்
- நவராத்ரி நன்னாளில் நாயகியாய் வந்தே
- நல்லருள் தாருமம்மா நல்லொளி ஒளிர்கவே
- நாடு நலம்பெற, உயிர்களுய்வு பெற, உன்னாசி
- வேண்டுமுன் காட்சிதான் பெற வேண்டுமதிலுமுன்
- சாட்சிநிலை பெற வேண்டும்
- மாட்சியாயுன் அருள் காத்தருள வேண்டும்
- நித்திய தரிசனமாய் வருகவே, நிறைவு தருகவே.
- நவகோள்களிலுன் ஆட்சி, நவரசங்களிலுன் பாவம்,
- அறுருசிகளிலுன் சுவை சாட்சி,
- சும்ப, நிசும்ப, மகிஷ, வதம் செய்த நவ சண்டிகை யுன் மீட்சி
- சதேவர்களைக் காத்துத் தேவியுன் மகாத்மீய சாக்ஷாத்காரமானது
- சசாயிதேவியாய்ப் பர்த்தீஸ்வரி, பரமேஸ்வரி, சண்டிகையாய்ச்
- சசகலமுமாய்ச் காத்தருள வர வேண்டும்,
- சஸ்ரீ சத்யசாயீஸ்வரியே போற்றி, போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்