தையல்நாயகித் தாயே
- தையல்நாயகித் தாயும் நீயே, தையல்களின் மஞ்சள்
- குங்குமத் திருமாங்கல்யத் திருஉருவும் நீயே
- மையலுன் கருணையைக் கண்டு கொண்ட
- பக்தர்களடைந்ததும் ஏராளம், அதுவுன் தாராளம்
- மூவுலகும், முத்தேவியரும், முத்தமிழும், முக்கனியும்,
- மூவின்பமும், உன்னருட்கொடைதான் சாயிமா
- இரு வினைகளின், மும்மலங்கள் நீக்கியே நான்மறைகளின்
- சாரங்க ளாயன்புப் பூமாரி தானருள்கிறாய்
- இருவழியிலு மிருளகற்றி இனியவை தந்து நற்பூக்கள்
- மாலை, மழையாய் வர்ஷிப்பாய்
- முப்போதும் எப்போதும் தப்பாது நீவந்துன்னருட்
- கழல்கள் தொழத்தருவாய்
- ஐந்தொழில்பூதங்க ளைந்தின், ஏகனின் பாதி நீ, ஐங்கரன்
- இளமுருகன் அன்னை நீ,
- அங்கையற்கண்ணியா யகிலாண்டகோடி
- பிரம்மாண்டநாயகியா யகிலத்தை ஆட்சி செய்யும் சாயிஸ்வரி
- சாயிமா உன் பொற்கமல மலர்ப்பாதம் பணிந்திடச்
- சாயி பார்வதி தேவியே நீ வருவாயே
- சரணம் போற்றி போற்றியே சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்