திருப்பர்த்திபுரி
- திருப்பதித் திருத்தலமே திருப்பர்த்திபுரி – உன்
- திரு அவதாரத்தலம் தான் எங்கள் பவதாரத் திருத்தலம்
- திரு உன் பொற்பதமும், சொற்பதமும், இங்குதான் சங்கல்பம்
- திருப்பாவை, திருவெம்பாவை, திருமுறைகள், போலுன்
- அருளுரைகள், அறவுரைகள், அருளமுத முத்துக்கள் சுவாமி
- உளமகிழ்ந்து மனம் நிறைந்த ஆத்மார்த்த
- அதிசயத் தருணங்களிங்குன் சாந்நித்யம்
- உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷணம் எங்களின்
- விஸ்வரூப மகாத்மியம்
- ஆத்மாவின் ஆத்மானுபவம், எங்களின் அனுபவ தத்துவம்
- பரம புண்ணிய பாக்கியம்
- அனைத்துயிர்களின் இதயத்தெய்வமே உதய வடிவமே
- ஸ்ரீ சத்யசாயி தெய்வமே உன் மகிமைத்துவம்
- என்றுமே நித்தியத்துவம்தான் சுவாமி
- திவ்ய ஸ்வரூபமாய் உடன் நீ காட்சி தர
- வேண்டுமருள் தரவேண்டும் சுவாமி
- ஸ்ரீ சத்ய நாராயணா உன்சங்கமத் திருவடிகளுக்கு
- ஆத்ம வந்தனம் சுவாமி. சரணம் சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்