கலியுகத்தவம்
- ஸ்ரீ சத்யசாயி சிவமே கலியுகத் தவமே
- பக்த அன்பர்களினகமே அகிலத்தின் சனாதனமே
- முக்திதரும் முடிவிலா ஆதி அந்தமே
- பக்தி தரும் பவித்திரப் பெருக்கே
- ஆடிவரும் அகண்ட காவிரியின் ஆடிப்பெருக்கே
- உன்னை நாடி வரும் நல்லோர்க்கினிய
- தெய்வ நமச்சிவாயமே
- பாடி வந்துன் பாதம் பணியத் தேடி வரும்
- நல் பக்தர்களின் பரிபூரணத்திருவே
- ஓடிவந்து கருணை செய்யும் ஓம்காரத் தலத்தருவே
- உனைத்தொழும் சத்சங்கத்தின் சத்சித் ஆனந்த
- சச்சிதானந்த சாயி சிவமே சிவசக்தி சொரூபனே
- பிறை சூடிய கங்கை கொண்ட பெருமானே
- உமைபங்கனே திங்களில் செவ்வாய்ச் சிரிப்புடன்
- செந்நிற அங்கியில் அழகுநடை நடந்து
- அபயமளித்திடத் திங்களாய் வந்தெமைக் காத்தே
- அருள்புரிய வரவேண்டும் சுவாமி
- ஸ்ரீ சத்யசாயீஸ்வரா சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்