பூவொடு நீரும் போதும்

  • புண்ணியப் பூசனை செய்பவர்க்குப் பூவொடு நீரும்
  • வேண்டுமிது திருமூலர் வாக்கு
  • எப்புண்ணியமும் அப்பூவும் நீரும் அனைத்துமே நீதான்
  • உன்அன்புக்கருணைதானன்றி வேறேது சுவாமி ?
  • ‘சாய்ராம்” மந்திரச்சொல்லும் உன் அனுபூதியாமுனது
  • நீறும் போதுமிது உன்பக்தர்தம் வாக்கும் நோக்குமே
  • தரிசனம் ஸ்பர்சனம்சம்பாஷண முன்னில்
  • பெற்றவர்களின் இப்பிறவிப்பயன் மெய்யே
  • உன் பக்தர் எண்ணியதை முதலில் தருவாய்
  • பின்னர் நீ எண்ணுவது மட்டுமே
  • தருவாய் எண்ணிக்கைகளாய்
  • வேண்டியதை வேண்டாமலே நீ தருவாய்
  • கண்ணிமைகளாய்க் காத்து ரட்சிக்கும் ஈசனே
  • அஞ்சுதலை நீக்கியருளிட ஆரமுதாய்
  • நஞ்சுண்ட நல்மணி கண்டசிவனே
  • ஸ்ரீ சத்ய சாயி ஈஸ்வரா உன் நற்றுணை
  • போதுமுந்தன் நமச்சிவாயப் பஞ்சாட்சரம்
  • நற்பவியாய்க் காத்தருள வேண்டும்
  • நடந்தும் இருந்தும் கிடந்தும் உணர்ந்தும்
  • புரிந்து முனைத் தொழுதுன்னடி பணிந்துன
  • தருட்கடலில் சங்கமிக்கவே வழித்துணையாய்
  • வாழ்வியலில் வரமாயென்றும் வரவேண்டும்
  • இருவினை களைந்து மும்மலங்கள் போக்கி
  • முத்தியளித்திட முன்னின்றே முன்னுரையாய்த்தான்
  • நீ வரவேண்டும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0