தூய உள்ளம் வேண்டும்

  • இதயமில்லா உயிர்களில்லை
  • இன்ப, துன்ப, உணர்ச்சிகளில்லா இதயமில்லை
  • அதைப் பார்க்கக் கண்கள் வேண்டும்
  • கேட்கக் காதுகள் வேண்டும்
  • உணரத்தூய உள்ளம்வேண்டும் என்றாய்
  • அன்புக்கருணை தந்தாட்கொள்ளும் அரவிந்த கேசவா
  • மாதவா உன்பாதாரவிந்தம் தொழத் தருவாயே
  • எங்களாதாரச் சொந்தம், பந்தம், நீதானென்றுணர
  • வைத்திடும் அக்கேதாரனும் நீயன்றோ
  • அது தான் மெய்யுமன்றோ
  • மூலாதாரன், ஆலாலகண்டன், வேலாயுதன்,
  • சாயி மணிகண்டன், தத்தாத்ரேயர்
  • அனைத்துமுன் வடிவம் அதில் நீ படிவமும் அன்றோ
  • அலை, கலை, மலை மகள்களும்
  • ஆதிசக்தி, அனந்தகோடிபிரம்மாண்டநாயகியும்
  • பர்த்திவாசினி, சிவசக்திஸ்வரூபிணியுமுந்தன்
  • அருட்சக்திக் கொடையன்றோ.
  • அணுவில், அண்டத்தில், பரப்பிரும்மமாய் வியாபித்ததுந்தன்
  • அன்பர்களைக்காத்தருளத்தானே, தானே இறங்கி
  • இரங்கி, வருகிறாய் நற்பவி நல்கவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0