கருணை செய்கிறாய்

  • வாச மலர்களில் வாசனையாய் நீயிருக்கிறாய்
  • பாச மனங்ளில் அன்பாய் ஆட்சி செய்கிறாய்
  • நேச நெஞ்சங்ளில் பிரேமையாய்க் கொலுவிருக்கிறாய்
  • பூசை உள்ளங்களில் கருவறையில்
  • கொலுவிருந்து குடிகொண்டிருக்கிறாய்
  • தேசங்களில் தெய்வமாயுலவி அருள்பாலிக்கிறாய்
  • காசினியில் கடவுளவதாரமாய்க் கருணை செய்கிறாய்
  • மேதினியில் பர்த்தித்தலம் நோக்கி வரவழைக்கிறாய்
  • உலகமெங்கும் வியாபித்து விரவிப் பரவியிருக்கிறாய்
  • தரணியில் தயாபரணாய்த் தயை செய்வித்து வருகிறாய்
  • ஞாலத்தில் ஞாயிறாய் வலம் வருகிறாய்
  • நான்மறையில் வேதமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறாய்
  • தேன்தமிழாய் நாவினில் நர்த்தனமிடுகிறாய்
  • சுந்தரத்தெலுங்கினில் சுந்தரமாயுரைத்து மகிழ்விக்கிறாய்
  • மந்திரவார்த்தை “சாயிராம் சாய்ராமென’ விளிக்கச் செய்கிறாய்
  • கற்பகத்தருவிலுன் பொற்பதம் பதித்திருக்கிறாய்
  • உன் சொற்பதங்களில் பற்பல அதிசயங்கள் செய்திருக்கிறாய்
  • உன் நற்பதமலர் தொழுவோர்க்கு நற்பவி நல்கி வருகிறாய்

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0