நெறி பிறழாமல்

  • விதைக்குள் செடி கொடி மரமாய்
  • துளிர், தளிர், இலை, பூ, மொட்டாய்
  • காய்கனி, வகையாய் வாகாய் வழிப்படுத்தி வடிவமைக்கிறாய்
  • பஞ்ச பூதங்களிலாட் கொண்டு நெறிபிறழாமல்

  • நெகிழ்விக்கிறாயவற்றை நெறிப்படுத்துகிறாய்
  • கண்ணுக்கிமைபோல் ஐம்புலன்களுக்கும்
  • அனைத்து அவயவங்களுக்கும் அகராதியே
  • படைத்துக் காக்கின்றாய்
  • மானிடராய்ப் பிறத்தலரிதுபோல் உன் சத்தியவாக்கை
  • மானுஷச் சேவைகளாற்றி எங்குமெதிலு
  • மெப்போது முப்போதும் அன்புடன்
  • சத்திய தர்ம சாந்தி பிரேமை அகிம்சையில்
  • வாழ்வியலாற்றி உதவிக்கரங்களால்
  • அனைத்துயிர்களுக்கும் உதவிட உந்தன்
  • சங்கல்ப மருளியுன் அபயஹஸ்த ஆசியும்
  • தாமரை மலர்ப்பாத பாதார விந்தம் தரிசனமும்
  • அருள்வாயே ஸ்ரீ சாயீசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0