வியாபித்திருப்பாய்
- சாயி முருகாவுனைச் சரணடைய சங்கடங்கள் தீரும்
- தாயி கந்தனாய் நீ வந்தெங்கள்
- சொந்தனாய்க் கருணை தருவாய்
- சாயி சரவணனுன் காவடிச்சிந்து கவலைகள் போக்கும்
- சாயி வேலனாய் வந்தே வடிவேலவனாய்க் காட்சி தருவாய்
- சாயி சரவணபவனுனை அபிஷேகித்தகம் மகிழ
- சாயி கடம்பனாய் வந்தெமக்கு இடுக்கண் களைவாய்
- சாயி சேந்தனுன் திருவடி தொழுதிட குருவடியாய்த் தெரிந்திடும்
- சாயி கதிர்வேலனுனைக் கதிர்காமத்தில் கண்டாலும்
- கனவு நனவிலும் காணுமிடமெங்கும்
- நீ வியாபித்திருப்பாய்
- சாயி சண்முகநாதனுன்தாள் பணியப்
- பல்வினைகள் பறந்தோடும் பரமே
- பிரசாந்தி சாயி சுப்ரமணியனுன் அன்புக்கருணையில்
- சந்ததிகள் அழகாயுன் சேவைகளாற்றியே
- வாழும் சாயி முருகா, குகா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: