பங்காரு
- ஆதி திருவரங்கமே பிரசாந்தியி னரங்கம்
- அனைத்திலும் சாயின் அங்கம்; வாராதே நீயிருக்க பங்கம்
- நீ விளிப்பதும் ‘பங்காரு’ தங்கம்
- உன்னருட் கருணையே அபரஞ்சிப் பொன்னாம்
- பஜன்கள் ஆனந்தப் பண்ணாம், பல்சுவையாய்
- சேவைகள் ஆத்மா வினழகாம் – என்றும்
- உனை நினைத்தலே மனதின் மகிழ்ச்சியே
- பக்தன் ஒவ்வொருவரனுபவமே சத்தியமே
- எப்படியெல்லாம் கருணைசெய்கின்றாய் சுவாமி
- ஆச்சர்ய ஆனந்த எல்லைதான்
- உன் அதிசய லீலா வினோதங்கள்
- சித்ராவதியும் கூறுமே உந்தன் ஆனந்த மகிமைகளை
- பூமியும் வானமும் சொல்லும் பரந்த விரிந்த
- உன் கருணைத்வம் காரணத்வம்
- உன் பக்தரைக் காத்து வரும் கலியுக தெய்வமே
- உன் பாதார விந்தம் பணிந்தெழ அருள்வாய்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: