நவராத்திரி நாயகியாய்

  • பாவ புண்ணியங்களிலிருந்து விடுபட்ட உயிர்களைச்
  • சீவனாம் சிவனிடம் சேர்த்தருள்பாலிக்கும் வல்லமை
  • கொண்ட சாயி மனோன்மணித் தாயாராய்,
  • உயிர்களில் கலந்து அவரவர் பாவ புண்ணியங்களைத்
  • தீர்த்தருள் புரிகின்ற சாயி சர்வபூத மணித்தாயாக,
  • சூரிய பகவானுடன் கலந்து தீயன அழித்து நல்லன நல்கி
  • நலம் தரும் வல்லமையுள்ள சாயி
  • பலப்ரத மணித்தாயாய் வானத்தில் கலந்து நின்றனைத்துப்
  • பொருட்களையும் தன்பாலே ஏற்றுத் தன்னுடன்
  • கலந்து நிற்க அருளும் வல்லமை கொண்ட சாயி
  • கலவிகரணி மாதாவாய்,
  • சந்திரனில் கலந்து நின்று அமுதத்தைத் தாவர உயிர்களுக்குப்
  • பொழிந்த கூட்டத்தில் நன்மை செய்யும் வல்லமை
  • படைத்த சாயி பலவிகரணி அன்னையாய் காற்றில்
  • கலந்து நின்றுயயிர்களுக்குப் பிராண வாயுவை
  • அளித்து நன்மைதரும் வல்லமை படைத்த
  • சாயி காளித் தாயாராய்
  • நெருப்பில் நின்று வெம்மையை வழங்கி யாவற்றையும்
  • அழிக்கும் வல்லமை கொண்ட சாயி ரௌத்திரித்தாயாய்,
  • நீரில் கலந்தனைத்துயிர்களுக்கும் நன்மை செய்யும்
  • வல்லமை படைத்த சாயி சேட்டைத் தாயாய்
  • மண்ணில் கலந்து நின்று பஞ்ச பூதங்களின் செயல்களையும்
  • ஒருங்கச் செய்தருள் பாலிக்கும் வல்லமை கொண்ட
  • சாயி வாமை அன்னைய யாயிந் நவராத்திரி
  • நன்னாளில் கொலுவிருக்க நீ வரவேண்டும்
  • ஸ்ரீ சிவசக்தி சத்யசாயி ஸ்வரூபிணி மாதாவே
  • உன் மலரடி சரணம் தாயே போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0