முத்தேவியராய்
- வீசுகின்ற தென்றலிலும் உன் மென்மை நடை நளினம் அழகு
- வாசமுள்ள மலர்களிலும் உன் சுகந்த மணம் அழகின் அழகு
- நேசமுள்ள மனதினிலுன் அன்பு ஊற்று பெருகி நின்று
- கருணை அளிப்பது பேரழகு
- பாசமுள்ள மனிதனாய்ப் பிரேமையில் வாழ நீ
- பணித்தது மகாப் பேரழகு
- சிவசக்தி சாயிமாவாகக் காட்சியளிக்கிறாய்
- பவதாரிணியாய்ப் பார்தனில் பவனி வருகிறாய்
- தவக்கோலத்தில் குமரியன்னையா யருள்பாலிக்கிறாய்
- அரி சோதரியாய் அகிலம் முழுவதும் ஆட்சி செய்கிறாய்
- மதுரை மீனாட்சியும், குழல்மொழி வாயம்மை,
- முத்தேவியராய், சிவசக்திஸ்வரூபிணியாய்ச்
- சேவை சாதிக்கிறாய்
- பிரசாந்தி வாஸினி பர்த்தீஸ்வரியாய்ப் பரமேஸ்வரியாய்ப்
- பரிவு காட்டுகிறாய்
- செவ்வாயில் உன் திருச்செவ்வாய் மலர்ந்தருளாசி
- நல்கிடுவாய் ஸ்ரீ சத்யசாயி மா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்