தீப ஒளியில்
- தீப ஒளித் திருநாள் வந்தது
- திரு உந்தன் அருளைத் தந்தது
- தீப ஒளி வரிசை போல் உனதருள்தனைப் பரிசாய்த் தந்தது
- உன் கருணைதான் வரிசையாய் நெஞ்சில் நிறைந்தது
- உன் அன்பு மதம் இனம் மொழியாலுலகில் இணைந்தது
- உன் பதம் தொழுது பாங்காய்ப் பணிந்தது
- உனை நிதம் நினைந் துன்பதம் பற்றியது
- உன் சத்யம், சிவம், சுந்தரம், அஷ்டோத்திரம், சாயி காயத்திரி
- சகஸ்ர நாம, மனைத்துமே படித்தது
- பஜன்கள் பாடியது நாமஸ்மரணை, நாமாவளிகள் பாடி
- நகர சங்கீர்த்தனம் செய்தது
- பர்த்தி யாத்திரை சென்றது வாழ்வியலில்
- இயன்ற சேவைகளைச் செய்து வருகிறது
- மலர்கிறது சுவாமி உன் கீதை வழி நடக்கிறது
- சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையில் நிலைத்தது
- உன் சத்சங்கங்கள் நீடித்தது உன் சரிதம் சரித்திர மயமானது
- “நான் இருக்க பயமேன்’ எனும்
- உன் மந்திரச்சொல் மகிமையாய்க் காக்கின்றது
- மாதா, பிதா, குரு. தெய்வச் சகாவாய் நீ உள்ளில் உரைவது
- உணர்ந்து உணரவைக்கிறது
- குறையொன்றுமில்லை மறைமூர்த்தி ஸ்ரீ சத்ய சாயி நாதனே
- உன் கமல மலர்ப் பாதங்களுக்கு
- ஆத்மார்த்த வந்தனங்கள் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: