நெறி பிறழாமல்
- விதைக்குள் செடி கொடி மரமாய்
- துளிர், தளிர், இலை, பூ, மொட்டாய்
- காய்கனி, வகையாய் வாகாய் வழிப்படுத்தி வடிவமைக்கிறாய்
- நெகிழ்விக்கிறாயவற்றை நெறிப்படுத்துகிறாய்
- கண்ணுக்கிமைபோல் ஐம்புலன்களுக்கும்
- அனைத்து அவயவங்களுக்கும் அகராதியே
- படைத்துக் காக்கின்றாய்
பஞ்ச பூதங்களிலாட் கொண்டு நெறிபிறழாமல்
- மானிடராய்ப் பிறத்தலரிதுபோல் உன் சத்தியவாக்கை
- மானுஷச் சேவைகளாற்றி எங்குமெதிலு
- மெப்போது முப்போதும் அன்புடன்
- சத்திய தர்ம சாந்தி பிரேமை அகிம்சையில்
- வாழ்வியலாற்றி உதவிக்கரங்களால்
- அனைத்துயிர்களுக்கும் உதவிட உந்தன்
- சங்கல்ப மருளியுன் அபயஹஸ்த ஆசியும்
- தாமரை மலர்ப்பாத பாதார விந்தம் தரிசனமும்
- அருள்வாயே ஸ்ரீ சாயீசா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: