sathyasai
- சாயி காயத்திரி தேவியே, கருணை பொழிந்திடக்
- காசினியில் வந்துதித்தாய்
- அவனியில் அனைவர்க்கும் அருளைப் பொழிந்திட
- அன்பே உருவாயவதரித்தாய்
- புவனம் முழுதும் புதுவசந்தம் பெறப் புதுவிடியலாயுன் அன்பு
- அருளாசிதனைப் பகிர்ந்தளித்தாய்
- சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையை இப்
- பார்முழுதும் பரிசளித்தாய்
- அவதியுற்றோர்க்கு அடைக்கலம் தந்தி டுவாய்
- திருநிறை தாயே, உன் திருவடி பணிந்தோம்
- மந்திரப் பொருளாக, மாதவப் பயனாக, மாதவன் சோதரியாய்
- இத்தரணியிலே பிரவேசித்துப் பக்திப் பிரவாகம்
- பரவச் செய்தாய், பரவசம் தந்தாய்
- வந்தனை செய்தவர்க்கு வரம் தந்தே வாழ்வளித்தாய்
- தீவினை வேதனை போக்கி வெந்துயர் தீர்த்து
- மேதினி உள்ளளவுமே காத்து நிற்பாய், கவசமாவாய்
- கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தந்து எண்ணும்
- போதெல்லாம் எதிரில் வந்து ஏற்றமே அளித்திடுவாய்
- கண்ணின் மணியாய் எங்களைக் காத்து இம்மண்ணுலகில்
- உயிர்கள் மகிழவே பேரருள் புரிகின்றாய்
- ஸ்ரீ சத்யசாயீஸ்வரி, பர்த்தீஸ்வரி, சிவசக்தி சாயிமா போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்