கேட்டதெல்லாம்

  • கேட்காமல் கேட்டதெல்லாம் உடன் தருவாய், பின்
  • நீ நினைத்தது மட்டுமாய்ப் பலன் தருவாயுன் கருணையால்
  • உன்னைச் சரணடைந்த பக்தரின் சத்தியமான
  • உண்மையிது தானே சுவாமி ?
  • உன் முழுச் சரணாகதி கடலினாழத்தைப்போல்
  • அளப்பரியதே
  • அவ்வுள்ளத்தில் கொலுவிருக்கு முனக்குத்
  • தெரியுமவ் வுள்ளமும் அறியும் உண்மையிதுவே
  • நாள் செல்லச் செல்ல உன்னைத் துதிப்பவர்
  • நெஞ்சறியு மெல்லாத் தெய்வங்களும்
  • ஒன்றேயது நன்றே அத்தெய்வம் நீயென்றே!
  • அந்நன்றான தெய்வம் அவதார காலத்தில்
  • நம் பிறவி பெற்றுள்ளதை நினைந்துருகும்
  • பன்மதப் பக்தரின் உண்மையான பிரார்த்தனையையும்
  • பக்தியையும் நியாயமான கோரிக்கைகளையும்
  • நித்திய மாய் நிறைவேற்றி வைக்கும்
  • ஸ்ரீ சத்யசாயி தெய்வம் இதுவே என நம்பி
  • விளங்கித்தான் வாழ்கின்றோம்
  • பஜன், பூமாலைகள், புத்தகங்கள், பார்த்தல்,
  • கேட்டல், பேசல், எதிலுமே சுலபப் பிரசன்னமாய்
  • நீ வந்தருள் பாலிக்கும் நிதர்சனமும்
  • நடைமுறையும் சாத்தியம்தானே சுவாமி
  • சத்தியதேவன் வந்தவதரித்தாய் பர்த்தித் தலமதிலே
  • பாரில் எத்தனை உயிர்கள் புத்துயிர் பெற்றன வென்று
  • கணக்கிட எல்லையும் இல்லையே
  • நித்திய வேதமிங்கு நிலைத்ததிப் புவிமீதினிலே, அது
  • ஸ்ரீ சத்ய சாயி எனும் கீதமாய் ஒலிக்குது பக்தரிதய வானிலே !

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0