அர்ச்சனைப் பூக்களில்

  • வெள்ளிக்கிழமைகளில் நீ விடிவெள்ளியாய்
  • வந்தருள வேண்டும்
  • துள்ளிக்குதிக்கும் மீன்களிலும் உன் கருணை
  • தெரிய வேண்டும்
  • அள்ளித்தரும் உன் கரங்களின் அபய ஹஸ்தம்
  • புரியவேண்டும்
  • பள்ளி தலங்கள் அனைத்திலும் உன் கருணையில்
  • கல்வியியல் சிறக்க வேண்டும்
  • மஞ்சள் குங்குமத்தில் மங்கள மங்கையர் திருமாங்கல்யத்
  • தாரணம் விளங்கவேண்டும்
  • பூவும் பொட்டுமாய்ச் சுமங்கலிகள் சுபமங்கலமாய்
  • சுகமாய் வாழ வேண்டும்
  • பாலும் தேனுமுன் னபிஷேகத்தில்
  • பொழிந்து வர்ஷிக்க வேண்டும்
  • பக்தருக்கும் உனக்கும் உள்ள அத்யந்த அன்பு
  • பாஷைகள் புரியவேண்டும்
  • மலர் மாலைகள் விதவிதமாய்ச் சூட்டி
  • சூடி மனம் மகிழவேண்டும்
  • அர்ச்சனைப் பூக்களில் அஷ்டோத்திரம்
  • சஹஸ்ரநாமம் அர்ச்சிக்க வேண்டும்
  • பஜன் பண்கள் பாடி கேட்டு எழுதி
  • நிறைந் தானந்திக்க வேண்டும்
  • பக்தர்களின் இதயம் உன் அன்பு கருணையில்
  • அருளில் உருகி மனம் நிறைந்து
  • நிறையச் சேவைகள் செய்திட வேண்டும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0