அர்ச்சனைப் பூக்களில்
- வெள்ளிக்கிழமைகளில் நீ விடிவெள்ளியாய்
- வந்தருள வேண்டும்
- துள்ளிக்குதிக்கும் மீன்களிலும் உன் கருணை
- தெரிய வேண்டும்
- அள்ளித்தரும் உன் கரங்களின் அபய ஹஸ்தம்
- புரியவேண்டும்
- பள்ளி தலங்கள் அனைத்திலும் உன் கருணையில்
- கல்வியியல் சிறக்க வேண்டும்
- மஞ்சள் குங்குமத்தில் மங்கள மங்கையர் திருமாங்கல்யத்
- தாரணம் விளங்கவேண்டும்
- பூவும் பொட்டுமாய்ச் சுமங்கலிகள் சுபமங்கலமாய்
- சுகமாய் வாழ வேண்டும்
- பாலும் தேனுமுன் னபிஷேகத்தில்
- பொழிந்து வர்ஷிக்க வேண்டும்
- பக்தருக்கும் உனக்கும் உள்ள அத்யந்த அன்பு
- பாஷைகள் புரியவேண்டும்
- மலர் மாலைகள் விதவிதமாய்ச் சூட்டி
- சூடி மனம் மகிழவேண்டும்
- அர்ச்சனைப் பூக்களில் அஷ்டோத்திரம்
- சஹஸ்ரநாமம் அர்ச்சிக்க வேண்டும்
- பஜன் பண்கள் பாடி கேட்டு எழுதி
- நிறைந் தானந்திக்க வேண்டும்
- பக்தர்களின் இதயம் உன் அன்பு கருணையில்
- அருளில் உருகி மனம் நிறைந்து
- நிறையச் சேவைகள் செய்திட வேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: