சீரடியில் ஈரடி

  • சீரடியில் ஈரடி எடுத்து வைத்தாய் சிவஸ்வ ரூபமாய்
  • பர்த்தியில் உன் திருவடி எடுத்து வைத்தாய்
  • சிவசக்தி ஸ்வரூபமாய்
  • ஸ்ரீ சத்ய நாராயணப் பிரசாதமாய் ஸ்ரீ சத்திய சாயிராமனாய்
  • சர்வ, சகல, தெய்வ ஸ்வரூபங்களாய்
  • அவதாரங்கள் மாறலாம் உன் பவதாரம் மாறுமோ சுவாமி
  • ஸ்ரீ சாயி காயத்திரியே உன் சர்வப் பரப்பிரும்ம
  • சங்கல்பம்தானே சுவாமி சாயி காயத்திரி மந்திரமே
  • உன் லீலா வினோதங்க ளத்தனையும் மனோ ரதங்கள்
  • மனதின் ராகங்கள் ஆத்மாவின் சாயி கீதங்கள்தானே
  • கனவிலும் நனவிலும்கூட நீ நினைத்த போது எங்களுக்குக்
  • காட்சி தந்து கடைத்தேற்றிக் கருணை செய்கிறாய் சுவாமி
  • நினைவிலும் நிஜத்திலும் நினைத்தாலே
  • வந்தருள்பாலிக்கிறாய் சுவாமி
  • உயிரிலும், உணர்விலும் உறைந்திருந்து
  • உயிர்ப்பிக்கிறாய் சுவாமி
  • உலகிலுனையன்றி உற்ற துணை யாருமுண்டோ சுவாமி
  • உன் பாதாரவிந்தங்களுக்கு ஆனந்த வந்தனங்கள் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0