சாயி சரஸ்வதிதேவிமா
- கலைகளின் தேவி கலைவாணி வாணி மா
- பாருக்கே மேதாவித்யம்தரும் தேவிபாரதி மா
- ஆயகலைக ளறுபத்துநான்கிலும் ஆட்சி புரிபவளே
- தேவி கலை வாணி மா
- சிருங்கேரி பீட நிவாஸினியே நித்யஸ்வரூபிணியே
- ஸ்ரீ சாரதா தேவி மா
- தூயவெண்பட்டில் மிளிர்பவளே தேவி கலாவதி மா
- நற்பவி நல்கி சாந்நித்ய மளித்திடும் தேவி சாந்தினி மா
- அபிநய பட்டத்தில் புகழ்தந்து திகழ்பவளே அபிநயா மா
- பௌர்ணமி நிலவாய் ஒளிர்பவளே அபிராமி மா
- சித்திரத்திலும் ஓவியமாய்த் தூரிகையாய்
- வரைபவளே சித்ராமாலா மா
- வசந்த கால வசந்தமே கலைச் சொந்தமே வசந்தினி மா
- அமிர்தமாம் சுவையில் தித்திப்பவளே அம்ருதா மா
- சந்தியா காலத்தின் சந்தியா வந்தனமே சந்தியா மா
- ஜோதிப் பிழம்பாய்ச் சத்தியவாக்கில் ஒலிப்பவளே
- சத்திய யோஜினி மா
- சத்திய, சாந்தி, பிரேமை, அகிம்சையை, வாழ்வியலில்
- வடித்தவளே சத்தியவாணி மா
- கம்பருக்கும், காளிதாஸருக்கும், பாரதிக்கும், கபிலருக்கும்,
- குமர குருபரருக்கும், அருளிய வீணா வாணியே
- உனதருளின்றிக் கதியேது கல்விக் கடாட்சமேது?
- சசிகலா, சரஸ்வதி, வாக்வாதினி, கலைமகள்,
- சரஸ்வதி, கலையரசி எனஆயிரமாயிரம்
- திருநாமங்களில் விளிக்க அருள்சுரந்து கருணை புரிய
- இறங்கி, இரங்கி, வருபவளே ஸ்ரீ சத்ய சாயிமா
- உன் பாதாரவிந்தங்களுக்கு வந்தனங்கள் அம்மா
- தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க உலகில்
- அனைத்துயிர்களும் நலமாய் வாழத் துணை நின்று
- காத்தருள வேண்டும் சத்ய சாயி தேவிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: