நவ துர்க்கையாய்

  • வனதுர்கை, ஜாதவோதுர்கை, சாந்திதுர்கை, தீப்துர்கை,
  • லவணதுர்கை, சூலினிதுர்கை,
  • ஜ்வாலாதுர்கை, சபரிதுர்கை, சூரிதுர்கையென
  • நவதுர்கைகளாய்ப் பிரசன்னமாகிக் காட்சி தந்து மாட்சியாய்
  • மீட்சிதந்து சாட்சியாய்க் கருணை புரிந்திடுவாயே சாயிமா
  • வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா (சியாமளா),
  • கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி,
  • கினிசரஸ்வதி, கடசரஸ்வதி யென அஷ்ட சரஸ்வதி
  • ஸ்வரூபிணிகளா யருள்பாலித்திட
  • வரவேண்டும் தாயே சாயிமா.
  • ஆதிலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி,
  • கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி,
  • வித்யாலட்சுமி, விஜயலட்சுமியாய் அட்டஐஸ்வர்யம்
  • தர அன்பருளாசி தர வரவேண்டும் சாயிமா
  • நவராத்திரித் திருநாளில் அனைத்திதயங்கள்
  • இல்லங்களில் கொலுவிருந்து காப்பாயே
  • ஸ்ரீ சத்ய சாயினிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0