சாயி சரஸ்வதிதேவிமா

  • கலைகளின் தேவி கலைவாணி வாணி மா
  • பாருக்கே மேதாவித்யம்தரும் தேவிபாரதி மா
  • ஆயகலைக ளறுபத்துநான்கிலும் ஆட்சி புரிபவளே
  • தேவி கலை வாணி மா
  • சிருங்கேரி பீட நிவாஸினியே நித்யஸ்வரூபிணியே
  • ஸ்ரீ சாரதா தேவி மா
  • தூயவெண்பட்டில் மிளிர்பவளே தேவி கலாவதி மா
  • நற்பவி நல்கி சாந்நித்ய மளித்திடும் தேவி சாந்தினி மா
  • அபிநய பட்டத்தில் புகழ்தந்து திகழ்பவளே அபிநயா மா
  • பௌர்ணமி நிலவாய் ஒளிர்பவளே அபிராமி மா
  • சித்திரத்திலும் ஓவியமாய்த் தூரிகையாய்
  • வரைபவளே சித்ராமாலா மா
  • வசந்த கால வசந்தமே கலைச் சொந்தமே வசந்தினி மா
  • அமிர்தமாம் சுவையில் தித்திப்பவளே அம்ருதா மா
  • சந்தியா காலத்தின் சந்தியா வந்தனமே சந்தியா மா
  • ஜோதிப் பிழம்பாய்ச் சத்தியவாக்கில் ஒலிப்பவளே
  • சத்திய யோஜினி மா
  • சத்திய, சாந்தி, பிரேமை, அகிம்சையை, வாழ்வியலில்
  • வடித்தவளே சத்தியவாணி மா
  • கம்பருக்கும், காளிதாஸருக்கும், பாரதிக்கும், கபிலருக்கும்,
  • குமர குருபரருக்கும், அருளிய வீணா வாணியே
  • உனதருளின்றிக் கதியேது கல்விக் கடாட்சமேது?
  • சசிகலா, சரஸ்வதி, வாக்வாதினி, கலைமகள்,
  • சரஸ்வதி, கலையரசி எனஆயிரமாயிரம்
  • திருநாமங்களில் விளிக்க அருள்சுரந்து கருணை புரிய
  • இறங்கி, இரங்கி, வருபவளே ஸ்ரீ சத்ய சாயிமா
  • உன் பாதாரவிந்தங்களுக்கு வந்தனங்கள் அம்மா
  • தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க உலகில்
  • அனைத்துயிர்களும் நலமாய் வாழத் துணை நின்று
  • காத்தருள வேண்டும் சத்ய சாயி தேவிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0