ஊரோடும் மலையேறுவோம்

  • வேலோடும் விளையாடும் வேல்முருகன் பெயரைச்சொல்லி
  • ஊரோடும் மலையேறுவோம்
  • உறவுடன் சுற்றம் நட்பாய்க் காவடிச் சிந்து பாடிக்
  • காவடிகள் கொண்டு சென்று ஆடிக்களித்திடுவோம்
  • மால்மருகன் முருகனைவேல்மாறல் பாடிக்கொண்டு
  • அவனருளை வேண்டியே துதித்திடுவோம்
  • மயில் மீது ஏறி வந்து சந்தனம் மணக்கவே
  • நம்மனதோடு பேசவைப்போம்
  • கந்தன் கவசமாய்க் காத்தேதான் கருணை செய்வான்
  • பஞ்சாமிர்தம் தந்து பால் பழம் பன்னீரில்
  • பாங்காய், பரவசமாய்ப் பக்தி செய்யலாம்
  • துளிக்கண்ணீர் வர விடாமல், கடுகளவும் சோராமல்
  • கருணை புரிய வருவான் கந்தன்
  • பிரணவம் சொன்னதுபோல், பிரளயமும் காத்துநின்று
  • வருதுன்பங்கள் நீக்கித் தந்து வந்த பிணிக்கும் மருந்தாகி
  • நம் மகிழ்வுக்கும் விருந்தாவான் முருகன்
  • நம்மை மகிழ்வித்தே மலர்ந்திடுவான் மால்மருகன்
  • பர்த்தித்தலமதனில் பார்கூடிப் பஜனைகளும் பாடியே
  • முருகனைத் துதித்திடலாம், சத்தியசாயியைப் பணிந்திடலாம்
  • சகலமும் நீயெனச் சர்வமும்தான் நீயெனச்
  • சாயிநாத முருகனைப் பணிந்தெழலாம்
  • ஸ்ரீ சத்தியசாயி முருகனுக்கு அரோகரா அரோகரா வென்று
  • அழகாய்ச் சொல்லித் தொழுதிடுவோம் – நம்
  • பாபாவின் ஆனந்தக் கருணையில் திளைத்திடுவோம்.
  • பிரசாந்தி சுப்பிரமணியனைச் சுபிட்சமாய்க்
  • கொண்டாடிப் பண்பாடி வணங்கிடுவோம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0