பரப்பிரம்மமாய்
- சாயி சிவமே ஒரே பரப்பிரம்மம் நீயானாய்
- இருவினைகளிலும், அல்லவை அகற்றி நல்லவை ஈந்து
- மும்மலங்கள் களைந்து, நான்மறை வேதங்கள் கற்றே
- நானிலம் போற்றச் செய்வாய்
- உன் ஐந்து எழுத்து ஓதுவோர்க்கரிதான
- வாழ்வளித்தும் வாழ்வியலில் வளம் தருவாய்
- ஆறுமுகன் கணபதி தந்தையே, உமைப் பாதி பாகனே
- ஏழ்பிறப்பு இருப்பின் நீ எந்தை தந்தையாயுன் கருணை
- தரவேண்டும்
- அட்ட செல்வங்கள் அளித்து எண்திக்கிலும் ஏற்றம்
- நீ அளிக்க வேண்டும்
- எட்டுச் செல்வங்களும் தந்து அற்புதம் அளிக்க வேண்டும்
- நவநதிகளாய் ஆர்ப்பரித்து நவநிதிகள் பதித்த நல்லருள்
- மாலைகளில் நர்த்தனமாய்நன்மைகள்செய்திட வேண்டும்
- பத்து அவதாரங்களிலும் பகிர்ந்து தயை செய்ய வேண்டும்
- அரனும் நீ, தசாவதாரனும் நீ, அரிஅரனாய், அகிலம்
- அனைத்திலும் எல்லா உயிர்களுக்கும் அன்னை தந்தையாகிச்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை, அளித்துன்
- கீதைப் பாதையில் வழிநடத்தி
- வாழ்விப்பாயே பரப்பிரும்மப் பராபரமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்