அதிசயப் பூதான்
- குறிஞ்சி மலர் போல் அதிசயப்பூதான் நீ
- அற்புதங்களாற்றுவதில் சாயி முருகா
- குன்றுதோறும் குடியிருக்கும் குமார
- சண்முக வடிவேலா சாயி முருகா
- முல்லைப்பூ மாலை சூடி உன்னைத்தொழுதால்
- காடும் சார்ந்த கானகமதில் உன்
- பக்திப்பூக்களுன் அருள் சொரியும்
- முக்திப் பாக்களைப் பரப்பும், மருத புன்னை மர நிழல்போல்,
- குளிர்விப்பாயுன் பக்தர்களை நல்லாசி தந்தே தான்
- வைகறைப்போதின் பூபாளம் போலுன்பஜன்பாக்கள்
- ராகமிசைத்திடும்
- நெய்தல் நிலத்திலுமுன் கருணைக் கொடை தானாய்த்
- தேடி வந்துன்னருளன்பைத் தரும்
- பாலை நிலம் கூட உன் கரிசன அக்கறையில்
- சோலைவனமாகிவிடும்
- உன் தரிசனம் கிட்டிவிட்டாலது உன் அதிசய அற்புதந்தான்
- குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐவகை
- நிலங்களிலும் பல்வகை லீலா வினோதங்கள் புரிந்து
- தானதிசயித்து பிரமிக்க வைக்கிறாய் சுவாமி
- ஐங்கரன்தந்தையாய்ப் பஞ்சமுகனாய்ப்
- பாதிஉமைப்பதியாயெப்பெயரில் அழைத்தாலும் பரப்பிரும்மமாய்
- ஏற்றம் தரவே வந்திடுவாய் ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே
- உனக்கு ஆத்ம வந்தனம் சுவாமி சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்