சத்ய (ஈ) அன்பு
- அன்னை என்றால் அன்பு அதனை என்றும் நம்பு
- உண்மை என்றும் நம்மை வழி நடத்தும் பண்பு
- அது ‘சாய்ராம்’ எனும் மந்திரச்சொல்லால் வரும் தெம்பு
- ஒழுக்கம் நம்மை நல்வழிப்படுத்தும் அன்பு
- விண்ணில் மீனும், மண்ணில் மரமும் உண்டு
- உன் அன்பு அருட்கருணைகாக்குமே
- பக்தர்தம் குறைகள்கண்டு
- பாரதநாட்டிற்கே பவித்ரம் தந்து பாருக்கே பரப்பிரும்மமானாய்
- அருளன்பு தந்தாய், நம் பண்பாடு கலாச்சாரத்தைப்
- பொக்கிஷமாய் ஈந்தாய்,
- சேவைப்பணிகளில் பணித்தாய்
- ஆத்மார்த்தமளித் திட்டாய்
- ஊணுருக, உனையெண்ணி உறைவோர்க்கு உற்ற துணை
- இணையாய், இரங்கி, இறங்கியே வந்தாய்
- எக்கானகத்தும் கவித்துவமாய்க் கலைநயமாய்க்
- காட்சியாய்த் தெரிந்தாய்
- வாழ்வியலில் நல்நல வாழ்வு வாழக்
- கருத்துக்கள் கணித்துத் தந்தாய்
- மெய்யுணர்வை வளர்க்கச் சொல்லி
- வெண்மையாய் மென்மை உள்ளம் தந்தாயதில்
- உனது அன்பை உணர்வுகளால் உணரச் செய்தாய்
- சத்தியமான வாழ்வு வாழச் சாத்தியமானாய்
- அதில் நீ சாட்சியாய் மாட்சி தந்து நல் ஆட்சியும் செய்திட்டாய்
- பொறுமை சகிப்புத் தன்மையுடன் வாழச் செய்தாய்
- வறுமையைப் போக்கி வாய்மமையாய் வாழச் செய்தாய்
- சிந்தையிலுந்தனை வந்தனை செய்வோம்
- எந்தை முந்தையே விந்தையே உனது வியத்தகு
- லீலா வினோதங்களே கற்பனைக் கெட்டா அதிசயமே
- வியாபகமாய் விடிவெள்ளியாய் முக்தி தர
- வருவாயே அருள் தருவாயே ஸ்ரீ சத்ய சாயி சிவமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்