சத்ய (ஈ) அன்பு

  • அன்னை என்றால் அன்பு அதனை என்றும் நம்பு
  • உண்மை என்றும் நம்மை வழி நடத்தும் பண்பு
  • அது ‘சாய்ராம்’ எனும் மந்திரச்சொல்லால் வரும் தெம்பு
  • ஒழுக்கம் நம்மை நல்வழிப்படுத்தும் அன்பு
  • விண்ணில் மீனும், மண்ணில் மரமும் உண்டு
  • உன் அன்பு அருட்கருணைகாக்குமே
  • பக்தர்தம் குறைகள்கண்டு
  • பாரதநாட்டிற்கே பவித்ரம் தந்து பாருக்கே பரப்பிரும்மமானாய்
  • அருளன்பு தந்தாய், நம் பண்பாடு கலாச்சாரத்தைப்
  • பொக்கிஷமாய் ஈந்தாய்,
  • சேவைப்பணிகளில் பணித்தாய்
  • ஆத்மார்த்தமளித் திட்டாய்
  • ஊணுருக, உனையெண்ணி உறைவோர்க்கு உற்ற துணை
  • இணையாய், இரங்கி, இறங்கியே வந்தாய்
  • எக்கானகத்தும் கவித்துவமாய்க் கலைநயமாய்க்
  • காட்சியாய்த் தெரிந்தாய்
  • வாழ்வியலில் நல்நல வாழ்வு வாழக்
  • கருத்துக்கள் கணித்துத் தந்தாய்
  • மெய்யுணர்வை வளர்க்கச் சொல்லி
  • வெண்மையாய் மென்மை உள்ளம் தந்தாயதில்
  • உனது அன்பை உணர்வுகளால் உணரச் செய்தாய்
  • சத்தியமான வாழ்வு வாழச் சாத்தியமானாய்
  • அதில் நீ சாட்சியாய் மாட்சி தந்து நல் ஆட்சியும் செய்திட்டாய்
  • பொறுமை சகிப்புத் தன்மையுடன் வாழச் செய்தாய்
  • வறுமையைப் போக்கி வாய்மமையாய் வாழச் செய்தாய்
  • சிந்தையிலுந்தனை வந்தனை செய்வோம்
  • எந்தை முந்தையே விந்தையே உனது வியத்தகு
  • லீலா வினோதங்களே கற்பனைக் கெட்டா அதிசயமே
  • வியாபகமாய் விடிவெள்ளியாய் முக்தி தர
  • வருவாயே அருள் தருவாயே ஸ்ரீ சத்ய சாயி சிவமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0