சர்வமதம் சம்மதம்

  • தொண்டருக்குத் தொண்டனான
  • ஸ்ரீராம ஆஞ்சநேய அனுமனும்
  • அடியார்க்கும் அடியேனாகிய சிவம் சித்தனாயும்
  • அன்பர்க்கு அன்பனாம் அருள்பாலிக்கும் தத்தாத்ரேயரும்
  • கோபியர் கோபர்களுக்குப் புனிதப்பிரேமை அன்பு
  • விதைத்திட்ட, ஸ்ரீ ராதா கிருஷ்ணணாயும்
  • தாய்க்குத் தாயாய் மும்மாரி பொழிவித்து குலம்காக்கும்
  • சாயி மாரித்தாயாயும்,
  • முத்தமிழ்த்தெய்வம் முருகு அழகு செந்தில் வேலவனாயும்
  • மும்மூர்த்தி களாம்பிரம்மா, விஷ்ணு, சிவமாகவும்,
  • எல்லாம் நிறைந்துள்ள அல்லாவாகவும்,
  • இயேசு, புத்த, மஹாவீர ராகவும்,
  • அலை, கலை, மலை மகள், ஆதிசக்தி சண்டிகையாயும்
  • எப்பெயரில் எப்படியழைத்திடினும் அவரவர்க்குக் காட்சி
  • தந்து கடாட்சிக்கும் கருணைத் தெய்வமுந்தன்
  • காருண்ய அபயஹஸ்த மளித்திடுமே
  • அனந்தகோடிகள் கருணை அன்பு அருளையே

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0