அகிலத்தில் அரசாட்சி
- ஞாலமதிலெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர்
- காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமாயவதரித்தாய்
- ஞானமதைச் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையாய்
- பக்தியில் விதைத்திட்டாய்
- கானமதைச்செவி குளிரக்கேட்டு இன்புற இனிய
- பஜன் பண்களா யிணைத்து அமைத்திட்டாய்
- சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய்
- பன்மதப்பக்தர்க்கும் பிரசாந்தியைப் புகலிடமாய்த் தந்திட்டாய்
- இன்சொல்பேசி இனிதாயிதமாய்ப் பணிவாய்ச்
- சேவைகளாற்றிடப் பணித்திட்டாய்
- கல்வி மருத்துவம் குடிநீர் இசை சனாதன தர்மத்தை
- வழி நடத்தி வாழ்வியலில் வளம் சேர்த்திட்டாய்
- கீதைப்பாதை வழி நடத்திச் சனாதன சாரதியுமாகினாய்
- அன்பு, மதம், இனம், மொழியால்,
- அகிலத்தி லரசாட்சி செய்கிறாய்
- பர்த்திப் பிரசாந்தி மனச்சாந்தி தரும்
- மகாப் பேரமைதி யளித்திடும்
- பிரகாந்தியெனப்பிரகடனப்படுத்தினாய்
- வட விருட்சத் தபோவனத்தில் தியானம், செபம்,
- மெய்ஞானம், கிட்டிட வரமளித்தாய்
- பர்த்தித்தலப் பயணத்தைப் பர்த்தி
- யாத்திரையாய் உருவாக்கினாய்
- ஒவ்வொரு உள்ளத்திலும் தாய் தந்தை இல்லமாய் எண்ணி
- மகிழ்ச்சியாய்க் கருவறையில்
- உன்னை வணங்கிடச் சங்கல்பமருளினாய்
- உன் பாதார விந்தங்களுக்குச் சந்ததியாய்ச்
- சமர்ப்பணம் சுவாமி
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: