சாயி கந்தன்
- அரிதிரு மகன்தனை, மாலின் மருகனை, உமையவள்
 - புதல்வனை, மூலாதாரன் இளவலை
 - ஆதி சக்தியினிளைய மகன்தனை,
 - வள்ளி தெய்வயானை சமேதனை அருணகிரி அருளனை,
 - முத்தித் திருமகனை, பர்த்தித்தல இறைவனை
 
- திருச்செந்தூர் முதல்வனை, முன்னின்றுகாத்து
 - முகவரியான வனை, அவ்வைப்பதிகனைப்
 - பிரணவத் தகப்பன்சாமியைச் சூரசம்ஹாரனை
 - சக்தி வேலனை, வேல்விருத்தமானவனை,
 
- ஸ்ரீ சத்திய சாயி முருகனைப்
 - பிரசாந்தி சுப்பிரமணியனைத் துதித்திடவே
 - வரும் துன்பங்கள் பறந்தோடி இன்பங்களிணை வருமே
 - ஈடில்லா இகபர சுகமதி லன்பர்களக மதிலானந்த
 - வெள்ளம் கருணையாய்ப் பாய்ந்திடுமே
 
- 
- ஸ்ரீ சத்யசாயி கந்தவேலனே அருட் கருணை புரிய வேண்டும்
 - உன் மலரடி சரணம் போற்றியே.
 
 
  
  Help Desk Number: