மிதிலையின் நாயகன்

  • மிதிலையின் நாயகன் சிதில மனத்தைச் சீர் செய்பவன்
  • சீர்மிகு பர்த்தியம் பதியினைப் பார்பார்க்க வைத்தவன்
  • பாருக்குள் நல்ல நாடு பாரத நாட்டில் மாநில ஊர்களுக்குள்
  • நற் புண்ணியப் பர்த்தியாய்க் கீர்த்திதனைச்
  • செய்து வைத்த கீர்த்தி வாச பூர்த்தி சாயிநேச சாயி மாதவன்
  • தேர் பவனி வந்து பார்வைக்குள் நிலைத்திட்டநேச
  • தெய்வப் பார்த்திபன் பார்த்தனின் சாரதியவன்
  • கார்கால மேகமாய்க் கருணைதனையே பொழிபவன்
  • நேர் நின்றுபார்த் தாலும், நெஞ்சமதில் நினைத்தாலும்
  • நெக்குருகச் செய்பவன், நெஞ்சம் நெகிழ வைப்பவன்
  • நேர்காணல்களில் மனம்மகிழ, நிறைவு நல்வார்த்தைகளாய்
  • வாக்குகளளித்த சாயி கேசவன், சுருட்குழல் கேசவன்
  • ஒரு வில், ஒரு சொல், ஒரு இல், லென ராம காவியம் படைத்தே
  • கீதைப் பாதையில் வாழச்செய்த எங்கள்
  • ஸ்ரீ சத்யசாயிராமனைப் பணிந்தவர்க்குக்
  • குறையேதுமிலையே கேசவ மாதவ, கோபால
  • கோவிந்த கோவர்த்தன யாதவா, முகுந்தா,
  • ஸ்ரீ சத்திய சாயிராமா உன் மலரடிகளே சரணாகதி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0