விடைமேல் சிவமாய்
- கருணையின் வடிவமே கற்பக விருட்சமே
- திருவாதிரைத் திரு வுருவே தர்மத்தின் பொற்கலமே
- அருவுருவாயருள் புரிந்திடும் கருணைத்தெய்வமே
- அன்பின் நதிகள் சங்கமிக்கும் அன்புமதக் கடலே
- கலங்கரை விளக்கமே
- அருளும் பொருளும் ஒன்றாகி, அன்புக் கடவுள் நீயாகி,
- உந்தனை நீயும் உணர்த்திட்டாய்
- உன்னை நிந்தனை செய்தோர்க்குமே நிர்மலமாய்க்
- கருணைதான் செய்திட்டாய், காட்சியாய்த் தெரிந்திட்டாய்
- ஒன்றே குலம், ஒன்றே பரப்பிரும்ம, மென உணரச் செய்தாய்
- அந்த ஒன்றே நீயாக நினைத்து வாழும்படி
- அருட்கொடையும் தந்திட்டாய்
- என்றும் நன்றே செய்வதை நடப்பாக்கினாய்,
- நட்பிலுமுருவாக்கினாய்
- நானிலத்தில் ‘நான் இருக்கப் பயமேன்’ என்றழகாய்
- அமுதவாக்கைத் தந்திட்டாயதை மந்திர வாக்காய் வழங்கிட்டாய்
- உன்னை வந்தனை செய்துன் மலர்ப்பாதம் தொழுதிட
- விடை மீதில் நீயும் சிவசக்தி சொரூபமாய் வந்தே
- காத்தருள வேண்டும் ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே சாயீசா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்